“ஆர்டர் ஆயிரம்... தேவையோ ஏழாயிரம்!”

பஸ் மார்க்கெட் | அசோக் லேலாண்ட் ராகுல் சிவகுரு

ள்ளிகள்/தனியார் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் பேருந்துகளுக்கு, எப்போதுமே நல்ல டிமாண்ட் உண்டு. இதைப் புரிந்துகொண்டு அசோக் லேலாண்ட் அறிமுகப்படுத்தி இருக்கும் வாகனம், சன்ஷைன். அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் டி.வெங்கட்ராமன், சன்ஷைன் வாகனத்தின் சிறப்புகளையும் தனித்தன்மையான விஷயங்கள் பற்றியும் கூறினார்.
 
‘‘SMS வடிவிலான i-Alert சிஸ்டம், பேருந்து எதன் மீதாவது மோதி விபத்து ஏற்பட்டால், பயணிகளைக் காக்கும் வகையிலான கட்டுமானம், சாலையில் செல்லும்போது இரண்டு வாகனங்களுக்கு இடையேயான இடைவெளியை ஓட்டுநருக்கு உணர்த்தும் அமைப்பு, உயரம் குறைவானவர்களும், குழந்தைகளும் எளிதாக வாகனத்துக்குள் செல்லும் வகையில் தாழ்வான படிக்கட்டுகள், தொற்று நோய்களைப் பரப்பாத Anti Microbial இருக்கைகள், பெரிய ஜன்னல்கள், குழந்தைகளைக் கவரும்படியான வண்ணமயமான உள்பக்கம், அற்புதமான இடவசதி, ஓட்டுநருக்கு வெளிச்சாலை தெளிவாகத் தெரியும் படியான வடிவமைப்பு என சன்ஷைன் பேருந்தைப் பார்த்துப் பார்த்து வடிவமைத்துள்ளோம். இந்தப் பேருந்தில் பயணம் செய்யும்போதும் ஒரு பாதுகாப்பான உணர்வு ஏற்படும். எனவே, இந்தப் பேருந்தின் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும்படியான பேருந்துகளை, இனி வரும் நாட்களில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றவரிடம் தொடர்ந்து பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick