டர் புர் டக்கார்

மோட்டார் ஸ்போர்ட்ஸில் டயர் பதிக்கும் ஹீரோ!ராலி | ஹீரோ மோட்டோ கார்ப்தமிழ், | படங்கள்: ப.சரவணகுமார்

எம்.ஆர்.எஃப், கேடிஎம், டிவிஎஸ் வழியில் இப்போது ஹீரோவும் மோட்டார் ஸ்போர்ட்ஸில் நுழைந்துவிட்டது. ஆனால், இது அதுக்கும் மேல! காரில் பெரிசு, புகாட்டி; பைக்கில் பெரிசு, டுகாட்டி. அதேபோல், ராலியில் பெரிசு டக்கார் ராலி. ‘இந்தியாவில் இருந்து முதன்முதலில் டக்கார் ராலியில் நுழைந்திருக்கிறோம். எங்கள் ராலி வீரர்களைப் பார்க்க வாருங்கள்’ என்று நம்மை அழைத்திருந்தது ஹீரோ.

ஆப்பிரிக்காவில், அட்லான்டிக் கடற்கரைக்கு அருகே மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு நகரம், டக்கார். 1978-ல் பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு ராலி, டக்காரில் நிறைவடைய வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், ஆப்பிரிக்காவில்  இருக்கும் மௌரிடேனியோ எனும் நாட்டில் ஏற்பட்ட அச்சுறுத்தலால், அது முடியாமல் போனது. அதன் நினைவாக இதற்குப் பெயர் ‘டக்கார் ராலி’ என்று பெயர் வந்துவிட்டது.

டக்கார் ராலி என்பது சாதாரண ராலி அல்ல. இதில், முழுக்க முழுக்க ஆஃப் ரோடில்தான் பயணம். சாதாரண பைக்/கார்களில், சாதாரண டிரைவர்கள் இதில் கலந்துகொள்ள முடியாது. பாலைவனம், சேறு, காடுகள், மணற்குன்றுகள், பாறைகள், குறுக்கிடும் நதிகள் என்று மிக மோசமான பாதைகளில் மட்டுமே நடைபெறும் ராலி இது. கிட்டத்தட்ட வாரக்கணக்கில், பல நாடுகளைக் கடந்து, ஆயிரக்கணக்கான கி.மீ தூரம் நடக்கும் இந்தக் கடுமையான எண்ட்யூரன்ஸ் ராலியில் கலந்துகொள்ள, முதலில் மோட்டோ கிராஸ் பந்தயங்களில் ஜெயிக்க வேண்டும். போட்டி நடத்தும் அமைப்பு அழைத்தால்தான் கலந்துகொள்ளவே முடியும்.
 
கார், பைக், ட்ரக், குவாட் (ATV) என்று நான்கு பிரிவுகளில் நடக்கும் டக்கார் ராலியில், ஜெர்மனியைச் சேர்ந்த ‘ஸ்பீடு பிரெய்ன்’ நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, டக்கார் ராலியின் பைக் பிரிவில் கால் பதித்திருக்கிறது ஹீரோ. ‘‘எங்கள் டக்கார் ராலி வீரர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்!’’ என்று ஹீரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் முன்ஜால் அறிமுகப்படுத்திய இரண்டு வீரர்களில் ஒருவர், பெங்களூருவைச் சேர்ந்த  சி.எஸ்.சந்தோஷ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick