“ட்ராக்கில் அண்ணாதான் எனக்கு எதிரி!” - ரேஸ் மலர்கள்

தமிழ் | படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

‘‘அண்ணா, ஓவரா ஆடாத! கடைசி லேப்ல சந்திப்போம். உன்னை இன்னைக்கு காலி பண்றேன்டா!’’ என்று 39-ம் நம்பர் ஜிக்ஸர் பைக்கை முறுக்கிப் பறந்தார் ஜெனிஃபர்.

‘‘முதல்ல லேப் ஃபினிஷ் பண்ணு! அப்புறம் முடிஞ்சா என்னை பீட் பண்ணு!’’ என்று 34-ம் நம்பர் ஜிக்ஸரைக் கிளப்பி சட்டென மறைந்தார் அலெக்ஸாண்டர்.

இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக்கில் நடந்த சுஸூகி ரூக்கி கப் ரேஸில், இப்படி பைக்கும் ஃபைட்டுமாக இருந்த ஜெனியும் அலெக்ஸும் - ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள்.

ஞாயிற்றுக்கிழமை ஃபைனலில் நடந்த ரூக்கி கப் ஒன் மேக் ரேஸில் இரண்டாவதாக வந்து ஆர்ப்பரிக்க வைத்த அலெக்ஸாண்டரும், 23 நிமிடங்களில் லேப்பை முடித்துப் பின்தங்கினாலும் ‘அடுத்த ரேஸ்ல பார்த்துக்கலாம்’ என்று அண்ணனை முறைத்துவிட்டு பயிற்சிக்குத் தயாராகிய ஜெனிஃபரும் - இப்போது சுஸூகியின் செல்லப் பிள்ளைகள்.

 ‘‘ஒரே வீட்ல எப்படி ரெண்டு ரேஸர்ஸ்.. அதுவும் இந்தச் சின்ன வயசுலேயே... சமாளிக்கிறது கஷ்டமாச்சே?’’ என்றபோது, ‘‘இவங்களுக் காகத்தான் சார் இந்த ரேஸிங் அகாடமியே ஆரம்பிச்சேன்!’’ என்றார் சுந்தர். 13 வயது ஜெனிபர், 14 வயது அலெக்ஸாண்டர் - இருவருக்கும் தந்தை; ‘கிங்டம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்’ ரேஸிங் டீமின் நிறுவனர்.

‘‘கோடம்பாக்கத்தில் இயங்கும் என்னோட ரேஸிங் டீமில், இப்போ என் பிள்ளைங்களோட சேர்த்து மொத்தம் 8 பேர் சுஸூகி ரேஸ்ல கலந்துக்கிறாங்க!’’ என்ற சுந்தர், ரேஸ் முடிந்து பிட் ஸ்டாப் வந்த தனது டீமை ஆசுவாசப்படுத்திவிட்டு நம்மிடம் ரிலாக்ஸ்டாகப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick