கிராமம் டு நகரம் - க்ளாஸ் பைக் விக்டர்! | TVS Victor - Readers Review - Motor Vikatan | மோட்டார் விகடன்

கிராமம் டு நகரம் - க்ளாஸ் பைக் விக்டர்!

ரீடர்ஸ் ரெவ்யூ | டிவிஎஸ் விக்டர் ர.மனோஜ் குமார் | படங்கள்: த.யோகேஸ்வரன்

நான் நீண்ட காலம் பஜாஜ் பாக்ஸர் ஓட்டிக்கொண்டிருந்தேன். அது நல்ல மைலேஜ் கொடுத்தாலும் பழைய பைக் என்பதால், அடிக்கடி சர்வீஸ் பிரச்னை வந்துகொண்டே இருந்தது. அதனால், புதிய பைக் வாங்க வேண்டும் என முடிவெடுத்தேன். மைலேஜுக்குப் பெயர் பெற்ற பஜாஜ் நிறுவனத்தின் பைக்கையே வாங்கலாம் என பஜாஜ் ஷோரூம் சென்று பார்த்ததில், டிஸ்கவர் எனக்குப் பிடித்திருந்தது.

அதையே வாங்கலாம் என்ற முடிவில்தான் இருந்தேன். அந்தச் சமயம், என் சக பணியாளர் புதிய விக்டர் பற்றி கூறினார், திருச்சி குண்டூர் பர்மா காலனியில் உள்ள SAP மோட்டார்ஸ் சென்று டிவிஎஸ் விக்டரைப் பார்த்தேன். முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. அன்று மாலையே  2,000 ரூபாய் கொடுத்து பைக்கை புக் செய்துவிட்டேன். அடுத்தநாளே டெலிவரி தருவதாகக் கூறினார்கள். நான்தான் நல்ல நாள் பார்த்து, மூன்று நாட்களுக்குப் பிறகு பைக்கை டெலிவரி எடுத்தேன்.

ஷோரூம் அனுபவம்

ஷோரூம் அனுபவம் திருப்திகரமாக இருந்தது. விக்டர் பற்றிய என் சந்தேகங்களைப் போக்கும்விதத்தில் பதில் சொன்னார்கள்.இதுவரை ஒருமுறை சர்வீஸ் செய்திருக்கிறேன். சர்வீஸிலும் எனக்குத் திருப்தியான அனுபவம் கிடைத்தது.

ஓட்டுதல் அனுபவம்

நான் கிராமச் சாலைகளில் அதிகம் செல்பவன். தினசரி கல்லூரிக்குச் சென்றுவர கரடுமுரடான சாலையில் பயணம் செய்கிறேன். ஆனாலும், உடல் அலுப்பு தெரியவில்லை. வாங்கிய முதல்நாள் எப்படி இருந்ததோ,  அதேபோன்ற ஸ்மூத்னெஸ்தான் இன்றும் உள்ளது. விக்டர், இதுவரை எந்தப் பிரச்னையும் கொடுக்கவில்லை. சமீபத்தில் என் மனைவியுடன் ஒரு விசேஷத்துக்கு சுமார் 65 கி.மீ சென்றுவந்தேன். ஆனாலும், அவ்வளவு தூரம் சென்று வந்த அலுப்பு இருவருக்குமே இல்லை.

என் நண்பர்களிடம் நான் டிவிஎஸ் விக்டர் வாங்கியிருக்கேன் என்று கூறியபோது, ‘அது பழைய மாடல் பைக். வேறு பைக் வாங்க வேண்டியதுதானே’ என்றனர். அவர்களுக்கு புதிய விக்டர் வந்திருக்கும் விஷயமே ரீச் ஆகவில்லை. ஆனால், பைக்கைப் பார்த்ததும் வாயடைத்துவிட்டனர்.புதிய விக்டர் எதிர்பாராத வகையில் ஒரு மிடில் கிளாஸ்   வாடிக்கையாளருக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் கொண்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick