கேட்ஜெட்ஸ் | Gadgets - Motor Vikatan | மோட்டார் விகடன்

கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம் | கேட்ஜெட்ஸ்கார்த்தி

ஐபோன் 7,7+

செப்டம்பரில் அறிமுகமான ஐபோன் 7, 7+ மாடல்கள் பற்றிதான் உலகம் முழுக்கப் பேச்சு.

அளவு: ஐபோன் 7, பார்ப்பதற்கு ஐபோன் 6S போலவே காட்சி அளித்தாலும் (அதே 4.7 இன்ச் அளவு)  ஐபோனின் டிரேட்மார்க் ஹோம் பட்டனை நீக்கிவிட்டு, அதை சென்ஸார் ஆக்கி இருக்கிறார்கள். ஐபோன் 7+ (5.5 இன்ச்) ஐபோன் 6S ப்ளஸ் அளவில் இருக்கிறது. அளவிலும் சரி, எடையிலும் சரி, முந்தைய மாடல்களின் காப்பியாக இருக்கிறது ஐபோன் 7, 7+.

 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ட்  வசதி இந்த ஐபோன் மாடல்களில் அறிமுகமாகியிருக்கின்றன. ஆனால், சோனி மற்றும் சாம்சங் போன்கள் வாட்டர் ப்ரூஃப் தொழில்நுட்பத்திற்கே சென்று சில காலம் ஆகிவிட்டதால், ஐபோனின் இந்த அப்டேட் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

கேமரா: ஐபோனின் ப்ளஸ் பாயின்டே அதன் கேமராதான். ஃபிரன்ட் கேமரா 7 மெகா பிக்ஸல்; ரியர் கேமரா 6S ப்ளஸ்  போல, அதே 12 மெகா பிக்ஸல்தான் என்றாலும், 7+ மாடலில் இரண்டு லென்ஸ்கள். அதாவது, 12 மெகா பிக்ஸல் Wide Angle, 12 மெகா பிக்ஸல் டெலிபோட்டோ லென்ஸும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 6S + மாடலில் இருந்த ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனை 7, 7+ ஆகிய இரண்டு மாடல்களிலும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஆடியோ ஜாக்: சார்ஜ் செய்யும் போர்ட் மூலமாகவே, இனி ஹெட்செட்டையும் கனெக்ட் செய்யலாம். பழைய ஹெட்செட்டுக்கு ஜாக் அடாப்டர் ஒன்றையும் வழங்குகிறார்கள்.

ஏர்பாட் என்ற புதிய வகை ஹெட்செட் அறிமுகம் செய்து இருக்கிறார்கள். வொயர் வசதி எதுவும் இல்லாமலேயே, இந்த ஹெட்செட்டை நாம்  பயன்படுத்த முடியும்.

ப்ளஸ்

வாட்டர் ரெசிஸ்டன்ஸ், கேமரா திறன், சிறந்த பேட்டரி திறன், 7+ மாடலில் இருக்கும்  டூயல் லென்ஸ்  ரியர் கேமரா.

மைனஸ்

ஹெட்செட் ஜாக் இல்லை. ஐபோன் 6S, 6S+ போலவே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick