நாங்க ப்ரேவ் பாய்ஸ்! | Sathyamangalam TeamB 2 Bikers club - Motor Vikatam | மோட்டார் விகடன்

நாங்க ப்ரேவ் பாய்ஸ்!

ப்ரேவ் பாய்ஸ் : பைக் கிளப்தமிழ், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

கிட்டத்தட்ட ‘மைனஸ் டிகிரிக்குப் போகலாமா, வேண்டாமா’ என்று யோசித்துக்கொண்டிருந்த ‘பட பட’ ஊட்டிக் குளிரில்... யாருமே இல்லாத டீக்கடையைச் சுற்றிலும் யமஹா R15, KTM, பல்ஸர், CBR, புல்லட் என்று ‘தட தட’ பைக்குகள். பைக்குகளின் இக்னீஷனைக்கூட ஆஃப் பண்ணாமல் - ரேஸிங் ஜெர்க்கின், ஹெல்மெட், க்ளோவ்ஸ் சகிதம் ஒரு பத்துப் பதினைந்து பேர் செல்லமாக டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தனர்.

விசாரித்தால், ‘‘டீ ரைடு கேள்விப்பட்டிருக்கீங்களா? ஊட்டி வரைக்கும் டீ சாப்பிட்டுப் போலாம்னு வந்தோம்!’’ என்று குளிரில் கூலாக தம்ஸ் அப் செய்தார்கள் அந்த பைக் ரைடர்கள். சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ‘TeamB 2’ பைக் கிளப்பினர். ‘‘வெறும் டீ குடிக்க மட்டும் நாங்க இந்த கிளப்பை ஆரம்பிச்சோம்னு நினைச்சுடாதீங்க பாஸ்!’’ என்று தனது R3 பைக்கின் இக்னீஷனை ஆஃப் செய்துவிட்டு வந்தார் பத்மநாபன். ‘TeamB 2 பைக் கிளப்பின் தலைவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick