மை டியர் குட்டிச்சாத்தான்!

பைக் : கேடிஎம் டியூக்தொகுப்பு: ராகுல் சிவகுரு

2017-ம் ஆண்டுக்கான கேடிஎம் டியூக் 200/390 மாடல்கள் பற்றி, இணையத்தில் பல்வேறு விதமான ஸ்பை போட்டோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்தியா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் எடுக்கப்பட்ட படங்களைப் பார்க்கும்போது, பைக்கின் தோற்றத்தில் மாற்றங்கள் இருப்பது உறுதியான நிலையில், புதிய டியூக் பைக் பற்றிய புதிய தகவல்கள் தற்போது வந்துள்ளன. அதாவது, வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் 1290 Super Duke R பைக் போன்ற டிஸைனை புதிய டியூக் பைக்குகள் பெறும் எனவும், கலர் ஆப்ஷன்களும் அதற்கேற்ப  இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், டுகாட்டி பனிகாலே பைக்கில் இருப்பதுபோன்ற கலர் TFT டிஸ்ப்ளேவில், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஓட்டுநரின் ஸ்மார்ட்போனை கனெக்ட் செய்ய முடியும் என்பதுடன், ஜிபிஎஸ் டேட்டா மற்றும் பைக்கின் வேகத்துக்கு ஏற்ப கலர் மாறும் ஸ்கிரீன் ஆகிய வசதிகளும் உள்ளன. புதிய டியூக்கின் பெட்ரோல் டேங்க் அளவு தெரியாவிட்டாலும், டேங்க்கின் டிஸைன் ஷார்ப்பாக இருப்பது ப்ளஸ். தவிர, பெட்ரோல் டேங்க் இரும்பால் செய்யப்பட இருப்பதால், காந்தம் கொண்ட டேங்க் பேக்குகளைப் பொருத்துவது இனி சுலபம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick