ஏமாற்றாது ஏப்ரிலியா... - ஈர்க்கும் இத்தாலி ஸ்கூட்டர்! | Aprilia SR 150 - First Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஏமாற்றாது ஏப்ரிலியா... - ஈர்க்கும் இத்தாலி ஸ்கூட்டர்!

SR 150-ன் பெர்ஃபாமென்ஸ் வியக்க வைக்கிறது!ஃபர்ஸ்ட் டிரைவ்: ஏப்ரிலியா SR 150தொகுப்பு: ராகுல் சிவகுரு

த்தாலியர்கள், கவர்ச்சியான வாகனங்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்றவர்கள். அந்த நாட்டைச் சேர்ந்த ஏப்ரிலியா தயாரிக்கும் பைக்குகள் வேகத்திலும், தொழில்நுட்பத்திலும் சொல்லி அடிப்பவை. எனவே, பணக்கார ஆட்டொமொபைல் ஆர்வலர்கள் மட்டுமே அதனை வாங்கக்கூடிய நிலை இதுவரை. தற்போது, SR 150 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக, இந்த நிலை மாறுவதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. எப்படி இருக்கிறது அனைவருக்குமான ஏப்ரிலியா?

டிஸைன் & சிறப்பம்சங்கள்

டிஸைன்படி பார்த்தால், SR150 ஒரு ஸ்கூட்டர்தான். இருந்தாலும், ஏப்ரிலியா எவ்வாறு அதனை அணுகியிருக்கிறது என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. கூர்மையான அலகை நினைவுப்
படுத்தும் முன்பக்கத்தில், இரட்டை ஹெட்லைட்ஸ் அழகாக பொசிஷன் செய்யப்பட்டுள்ளன. இது ஹேண்டில்பாரில் இல்லாமல் கீழே இருப்பதால், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஷார்ப்பான பிளாஸ்டிக் பாடி பேனல்களில் செய்யப்பட்டுள்ள ரேஸிங்கான கிராஃபிக்ஸ், SR150-ன் ஸ்போர்ட்டியான லுக்குக்குத் துணை நிற்கிறது. 14 இன்ச் அலாய் வீல்களில் பொருத்தப்பட்டுள்ள அகலமான டயர்கள், ஸ்கூட்டருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றன. சுருக்கமாகச் சொல்வது என்றால், சாலையில் செல்லும் பலரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்படி இருக்கிறது SR150. ஸ்கூட்டரில் உட்காரும்போது, உயரம் அதிகமானவர்களுக்கும் ஏற்ற ரைடிங் பொசிஷன் கிடைப்பது சொகுசாக இருந்தாலும், இடநெருக்கடி இருக்கிறதோ என்ற உணர்வு எழுகிறது. பிரேக் லாக் க்ளாம்ப் இல்லாதது, டிஜிட்டல் மீட்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருப்பது, பிளாஸ்டிக் தரம் ஆகியவை SR150 ஒரு பட்ஜெட் ஸ்கூட்டர் என்பதை நினைவுபடுத்துகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick