புதிய எட்டியோஸ்...மாறியது என்ன?

முதல் பார்வை: டொயோட்டா எட்டியோஸ்தமிழ்

* புது கிரில்
* ஹைட்ராலிக் இன்ஜின் மவுண்ட்
* பெட்டர் சஸ்பென்ஷன்
* மிருதுவான கிளட்ச்
* கவர்ச்சியான அலாய் வீல்


வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதில் டொயோட்டா எப்போதுமே முன்னோடி. அர்னால்டுக்கு ‘டெர்மினேட்டர்’ மாதிரி, டொயோட்டாவுக்குப் பேர் வாங்கித் தந்த பெருமை, நிச்சயம் குவாலிஸைத்தான் சேரும். ‘‘5 லட்சம் ஓடிடுச்சு.. ஒரு தடவைகூட ரோட்ல நின்னதே இல்லை!’’ என்று சாலைகளில் குவாலிஸ்களை ரசித்து ஓட்டும் டாக்ஸி டிரைவர்களை இன்றும் பார்க்கலாம். ‘அப்பா நம்ம நல்லதுக்காகத்தான் பண்ணுவார்’ என்று பிள்ளைகள் நினைப்பதுபோல, ‘டொயோட்டா பண்ணினா கரெக்டாகத்தான் இருக்கும்’ என்று வாடிக்கையாளர்களை நம்பவைத்திருப்பதில் இருக்கிறது டொயோட்டாவின் வெற்றி.

வாடிக்கையாளர்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்றிருந்த டொயோட்டா, அந்த நம்பிக்கையில் வெளியிட்டதுதான் எட்டியோஸ். 2010 கடைசியில் வெளிவந்த பெட்ரோல் எட்டியோஸ் அவ்வளவாக விற்பனையாகாததால், லேசாகக் கலங்கித்தான் போனது டொயோட்டா. பின்னர் டீசல் இன்ஜின் மாடலில் வந்தது எட்டியோஸ். விற்பனையில் பின்தங்கவில்லை என்றாலும் எட்டியோஸால் டாப்-10 பட்டியலில் இடம் பிடிக்க முடியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick