அலட்டல் இல்லாத ஆடி!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஆடி A4 தொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்தியாவில் A3 கார்தான் ஆடியின் விலை குறைவான மாடல். ஆனால், அதிகம் விற்பனை ஆவது என்னவோ A4 மாடல்தான்.

ஆனால், போட்டி யாளர்களின் அதிரடியால், சந்தையில் தனது இடத்தை இழந்த ஆடி, அதனை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிய A4 காரைக் களமிறக்க இருக்கிறது. பழைய காருக்கும் இதற்கும் தோற்றத்தில் வித்தியாசம் இல்லையே என முதலில் தோன்றினாலும், கூர்ந்து கவனித்தால், மாற்றங்கள் தென்படுகின்றன.

ஆடியின் புதிய MLB EVO பிளாட்ஃபார்மில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளதால், பழைய காரைவிட 95 கிலோ எடை குறைவாக இருக்கிறது. காருக்குள்ளே நுழைந்தால், விலை அதிகமான Q7-க்குள் சென்றதுபோல இருக்கிறது.

அனலாக் ஸ்பீடோ மீட்டருக்குப் பதிலாக, Q7-ல் இருந்த ‘Virtual Cockpit’ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் இங்கும் தொடர்வது க்ளாஸ். மர வேலைப்பாடுகள் உடனான டேஷ்போர்டின் தரம் அசத்தல் ரகம். பழைய காரைவிட புதிய A4-ல் இடவசதி அதிகரித்துள்ளதுடன், இருக்கைகளும் சொகுசானதாக மாறியுள்ளன. சிறப்பான டிரைவிங் பொசிஷன் காரணமாக, வெளிச்சாலை தெளிவாகத் தெரிகிறது.

பழைய காரில் 170bhp பவர் மற்றும் 32kgm டார்க்கை வெளிப்படுத்திய 1.8 லிட்டர் இன்ஜின் - CVT கியர்பாக்ஸ் அமைப்பு இருந்தது. புதிய A4-ல், 150bhp பவர் மற்றும் 25kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் இன்ஜின் - 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick