1000 சிசி க்விட் இப்போது பவர்ஃபுல்! | Renault KWID 1.0 - First Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்

1000 சிசி க்விட் இப்போது பவர்ஃபுல்!

ஃபர்ஸ்ட் டிரைவ் : ரெனோ க்விட் 1.0தொகுப்பு: ராகுல் சிவகுரு

கிராஸ்ஓவர் போன்ற டிஸைன், நல்ல இடவசதி கொண்ட கேபின், அதிக சிறப்பம்சங்கள், கொடுக்கும் காசுக்கு மதிப்பு ஆகிய அம்சங்கள் ஒன்றுசேர்ந்து, ரெனோவின் சூப்பர் ஸ்டாராக க்விட் காரை மாற்றியுள்ளன. கார் அறிமுகமான ஓர் ஆண்டுக்குள் 80,000-க்கும்  அதிகமான புக்கிங்குகளைப் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. பெரும்பாலான க்விட் உரிமையாளர்கள், காரின் பெர்ஃபாமென்ஸைப் பற்றிப் பெரிதாக வியந்து சொல்லாததைக் கேட்டிருக்கலாம். இதில் உள்ள 799சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினின் மைலேஜ் சிறப்பாக இருந்தாலும், குறைவான பவர் காரணமாக  ஓட்டுதலில் பின்தங்கி இருந்தது. இதனைக் களையும் விதமாக, கூடுதல் திறன் கொண்ட 999சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை க்விட்டில் பொருத்தியுள்ளது ரெனோ. இது பழைய காரைவிட அதிக பவர் (68bhp) மற்றும் (9.1kgm)டார்க்கை வெளிப்படுத்துகிறது.

1.0 லிட்டர் இன்ஜினில், அதிர்வுகள் குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், ஆரம்ப வேகத்தில் இன்ஜினின் செயல்பாட்டில் முன்னேற்றம் தெரிகிறது. முன்னே செல்லும் காரை ஓவர்டேக் செய்வதற்கான பவர் கிடைப்பதுடன், பெர்ஃபாமென்ஸிலும் கெத்து காட்டுகிறது க்விட். 0 - 100 கி.மீ வேகத்தை, 800சிசி காரைவிட 2 விநாடிகளுக்கு முன்னதாக, அதாவது 15.78 விநாடிகளில் எட்டிப் பிடிக்கும் இந்த காரின் கிளட்ச் மற்றும் கியர்பாக்ஸ் பயன்படுத்த எளிதாக இருப்பது பலம். 1,000 சிசி இன்ஜின்கொண்ட க்விட்டில் AMT கியர்பாக்ஸை, இந்த ஆண்டு இறுதிக்குள் எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick