ஒரு வழியாக ஜீப்! | Jeep Grand Cherokee and Jeep Wrangler - First Look - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஒரு வழியாக ஜீப்!

முதல் பார்வை: ஜீப்ர.ராஜா ராமமூர்த்தி

நான்கு ஆண்டுகளாக ‘இந்தா வந்தாச்சு, கூடிய விரைவில், இன்னும் ரெண்டே மாசம் ப்ரோ’ என இழுத்தடிக்கப்பட்டு வந்த ஜீப் பிராண்ட், ஒருவழியாக இந்தியாவுக்கு வந்துவிட்டது. கிராண்ட் செரோக்கி, ஜீப் ரேங்ளர் ஆகிய இரண்டும் முழுவதுமாக இறக்குமதி செய்துதான் இங்கே விற்பனை செய்கிறது ஜீப்.

ஜீப் கிராண்ட் செரோக்கி

Limited மற்றும் Summit என இரண்டு வேரியன்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. ரேங்ளர் எஸ்யுவி். ஜீப் கிராண்ட் செரோக்கி SRT பெர்ஃபாமென்ஸ் மாடலும் விற்பனைக்கு வருகிறது. SRT மாடல் மட்டுமே பெட்ரோல் மாடல். மற்ற இரண்டும் டீசல்தான்.

240bhp சக்தியை அளிக்கும் 3.0 லிட்டர் எக்கோ டீசல் டர்போ சார்ஜ்டு V6 டீசல் இன்ஜின் சாதாரண வேரியன்ட்டுகளில் உள்ளது. இதன் டார்க் ரேட்டிங் 58.10 kgm. லிமிடெட் வேரியன்ட்டில் Quadra-Trac II - 4 வீல் டிரைவ் சிஸ்டமும், சம்மிட் வேரியன்ட்டில் Quadra Drive II - 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் கியர் வேலைகளைப் பார்த்துக்கொள்கிறது. இதில், பேடில் ஷிஃப்டர் இருப்பது பெரிய ப்ளஸ் பாயின்ட். கிரவுண்ட் கிளியரன்ஸ் 206 மிமீ என்பதால், அவ்வப்போது ஆஃப் ரோடு சாகசங்களுக்கும் இந்த எஸ்யுவி செட் ஆகும்.

SRT பெர்ஃபாமென்ஸ் மாடலில் 6.4 லிட்டர் HEMI V8 பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது, 469.17bhp சக்தியையும்,  64.22 kgm டார்க்கையும் அளிக்கிறது. Quadra-Trac 4 வீல் டிரைவ் சிஸ்டம் நான்கு வீல்களுக்கும் சக்தியைப் பிரித்தளிக்கிறது. பார்க்கவும் SRT மாடல் மிரட்டலாக இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் கார் லெவல் பெர்ஃபாமென்ஸை ஒரு எஸ்யுவியிடம் இருந்து எதிர்பார்ப்பவர்களுக்கு செரோக்கி SRT நல்ல சாய்ஸ். முக்கியமான பாயின்ட், சாதாரண மாடலைவிட 4 மிமீ அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick