நவம்பரில் வருகிறது மிட்சுபிஷி மான்ட்டெரோ! | Mitsubishi Montero to be launched in India in November - Motor Vikatan | மோட்டார் விகடன்

நவம்பரில் வருகிறது மிட்சுபிஷி மான்ட்டெரோ!

மிட்சுபிஷி மான்ட்டெரோராகுல் சிவகுரு, படம்: த.ஸ்ரீநிவாசன்

ப்பானில் தான் ஏற்கெனவே விற்பனை செய்யும் மிட்சுபிஷி மான்ட்டெரோ எஸ்யுவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை, வருகிற நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது மிட்சுபிஷி. காரின் வெளிப்பக்கம் மற்றும் உள்பக்கத்தில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பக்கம் கிரில், க்ரோம் பட்டையுடன் புதிய டிஸைனில் பிரம்மாண்டமாக இருக்கிறது. புதிய பானெட் அதற்குத் துணையாக இருக்கிறது. மேலும், LED டே டைம் ரன்னிங் லைட் மற்றும் பின்பக்க பனி விளக்கு அளிக்கப்படுகிறது. புதிய பம்பர்கள் மற்றும் பாடி கிளாடிங், காரின் தோற்றத்துக்கு உதவுகின்றன.

முன்பு, 17 இன்ச் டயர் இருந்த நிலையில், தற்போது அது 18 இன்ச் டயராக மாற்றப்பட்டுள்ளது. அலாய் வீல்களும் புதிது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 202 மிமீயில் இருந்து, 235 மிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick