ஆறாம் தலைமுறை!

ஹூண்டாய் எலான்ட்ராராகுல் சிவகுரு

லகெங்கும் ஹூண்டாய் விற்பனை செய்யும் பிரீமியம் செடான் காரான எலான்ட்ராவின் ஆறாவது தலைமுறை மாடல், 12.99 லட்சத்துக்கு (டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை) நம் நாட்டில் அறிமுகமாகியுள்ளது. S, SX, SX AT, SX(O), SX(O) AT என்று 5 வேரியன்ட்கள், 5 கலர் ஆப்ஷன்களைக் கொடுத்திருக்கிறது ஹூண்டாய்.

 பெரிய அறுகோண வடிவ கிரில், HID புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED DRL மற்றும் டெயில் லைட்ஸ், ஸ்டைலான 16 இன்ச் அலாய் வீல்கள், ஷார்ப்பான பாடி லைன்கள், சின்ன ஸ்பாய்லர் என புதிய எலான்ட்ராவில் மாற்றங்கள் தென்படுகின்றன. இதன் வீல்பேஸில் (2,700 மிமீ) மாற்றம் இல்லாவிட்டாலும், இது பழைய காரைவிட 80 மிமீ அதிக நீளம்; 25 மிமீ அதிக அகலம் என வளர்ந்திருப்பதால், இடவசதி முன்னேற்றம் அடைந்திருக்கிறது. தவிர, காரின் உயரம் 20 மிமீ குறைந்துள்ளதால், நல்ல ஏரோடைனமிக்ஸ் கிடைக்கும் (0.29 Drag) என்கிறது ஹூண்டாய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick