மிரட்டல் க்ரெட்டா!

அறிமுகம்: ஹூண்டாய் க்ரெட்டாராகுல் சிவகுரு

ந்தியாவில் இருந்து அதிக கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம், ஹூண்டாய். தான் தயாரித்த காம்பேக்ட் எஸ்யுவியான க்ரெட்டா வெளியாகி ஓர் ஆண்டு ஆனதைக் கொண்டாடும்விதமாக,
Anniversary Edition மாடலையும், கூடுதலாக E+ (பெட்ரோல் MT) மற்றும் S+ (டீசல் AT) என இரண்டு வேரியன்ட்களையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் 1.25 லட்சம் க்ரெட்டா எஸ்யுவி கார் விற்பனையாகி உள்ளதாக ஹூண்டாய் கூறியுள்ளது.

Anniversary Edition மாடலின் வெளிப்புறத்தில், டூயல் டோன் கலர்கள், கறுப்பு வண்ண ரூஃப் (C-பில்லர், பின்பக்க ஸ்பாய்லர்), 17 இன்ச் அலாய் வீல்கள், ஷார்க் ஃபின் போன்ற Antenna, சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பாடி கிராஃபிக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. காரின் உள்பக்கத்தில், சிவப்பு நிற வேலைப்பாடுகள் உடனான கறுப்பு வண்ண டேஷ்போர்டு மற்றும் சீட் ஃபேப்ரிக், 7 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஆடியோ-ப்ளூடூத் கன்ட்ரோல்கள் உடனான லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் ஆகியவை உண்டு. இதுதவிர, புதிதாக Earth Brown வண்ணம் அறிமுகமாகியுள்ளதுடன், 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கொண்ட S+ வேரியன்ட்டில், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட  E+ வேரியன்ட்டில், ட்வீட்டர்கள் உடனான 5 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஆடியோ-ப்ளூடூத் கன்ட்ரோல்கள் உடனான ஸ்டீயரிங் வீல், ரூஃப் ரெயில், பின்பக்க ஏ.சி வென்ட், எல்ஈடி இண்டிகேட்டர்கள் உடனான எலெக்ட்ரிக் அட்ஜஸ்டபிள் மிரர்கள் இடம்பெற்றுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick