இனோவா க்ரிஸ்டா - அசத்தல் ஆட்டோமேட்டிக்

டெஸ்ட் டிரைவ்: இனோவா க்ரிஸ்டா 2.8 AT டீசல் ராகுல் சிவகுரு, படம்: ப.சரவணகுமார்

21-வது நூற்றாண்டின் வெற்றிகரமான பாஸெஞ்சர் வாகனம் என்று டொயோட்டா இனோவாவைச் சொல்லலாம். ஏனெனில், இந்த கார் விற்பனையில் இருந்த 10 ஆண்டுகளில், எந்த  எம்பிவி காராலும் இதனை வீழ்த்த முடியவில்லை. அதேசமயத்தில், இனோவாவின் விலை அதிகரித்துக்கொண்டே இருந்தது என்றாலும், இதற்கான ரசிகர் வட்டமும் அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு காரின் அடுத்த தலைமுறை வாகனத்தை, பழைய வாகனத்தின் பலங்களுடன் காலத்துக்கு ஏற்ற புதிய அம்சங்களைச் சேர்த்துத் தயாரிப்பது என்பது மிகப் பெரிய சவால். ஆனால், அதை டொயோட்டாவின் இன்ஜினீயர்கள் குழு சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். பிரீமியம் டிஸைன், தரமான கேபின், சிறப்பான ஓட்டுதல் அனுபவம் என அசத்தலாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இனோவா க்ரிஸ்டா, லக்ஸுரி எம்பிவி எனும் செக்மென்ட்டையே புதிதாக ஆரம்பித்திருக்கிறது.

இந்த கார் அறிமுகமான புதிதில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட டாப் வேரியன்ட்கள்தான் நிறைய புக் செய்யப்பட்டன. மேலும், அதிக அளவில் விற்பனையாகும் டாப்-10 பட்டியலில் இருந்த விலை அதிகமான காரும் இதுதான். இதையெல்லாம் பார்க்கும்போது, மக்கள் இதற்கு ஆரவாரமான வரவேற்பை அளித்துள்ளது தெளிவாகிறது. எனவேதான் பவர்ஃபுல்லான 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி இடம்பெற்றுள்ள மாடலை டெஸ்ட் டிரைவ் செய்துள்ளோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick