சிங்கம் அல்ல... சிறுத்தை! | Jaguar XE – The Compact and Luxurious sports sedan - Motor Vikatan | மோட்டார் விகடன்

சிங்கம் அல்ல... சிறுத்தை!

டிரைவ்: ஜாகுவார் XE பெட்ரோல்கட்டுரை, படங்கள்: பத்ரி

ஜாகுவார் என்றால், கம்பீரம்... கெளரவம்... பெருமிதத்தின் அடையாளம். இங்கிலாந்தின் மிகப் பெரிய நிறுவனமான ஜாகுவார், இப்போது டாடாவின் கையில். அழிவின் பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருந்த ஜாகுவார், லேண்ட்ரோவர் நிறுவனங்களை 2008-ல் டாடா வாங்கியபிறகு, புத்தம் புது கார்களின் அப்டேட்டுகள் வேகம் எடுக்கத் துவங்கின. அந்த வரிசையில் மிக முக்கியமான கார், ஜாகுவார் XE.

ஸ்டைல்!

ஜாகுவார் XE - பென்ஸ் C கிளாஸ், பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், ஆடி A4 கார்களுடன் போட்டி போடும் என்ட்ரி லெவல் சொகுசு கார். ஜாகுவாரின் பெரிய கார்களான XJ, XF கார்களைப் போன்ற அதே தோற்றத்தில் குட்டியாக, அதே சமயம் கொஞ்சம் ‘கொழுக் மொழுக்’ சூப்பர் ஸ்டாராக இருக்கிறது ஜாகுவார் XE. தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கும் முன்பக்க பானெட்டில் மெகா சைஸ் பம்ப்பர் இருக்கிறது. அதனுள் பிரம்மாண்டமாக சீறுகிறது ஜாகுவாரின் புலி லோகோ. J வடிவில் ஹெட்லைட்டுக்கு மேலே ஒளிரும் LED விளக்குகள் இரவில் ஜாகுவாரைத் தனித்துக் காட்டுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick