சர்வீஸ் பிரச்னை... தீர்வு எங்கே?

‘எந்த கார் வாங்கலாம்? அதற்கு எங்கே லோன் வாங்கலாம்?’ என்பதைவிட, ‘எங்கே சர்வீஸ் விடலாம்’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் பிரச்னை. நண்பர்களிடம் ஆலோசனை நடத்தி, பத்திரிகைகளை அரக்கப் பரக்கப் புரட்டி ஒரு நல்ல கார் வாங்கியிருப்போம். ஆனால், சர்வீஸ் என்று வரும்போதுதான் ஆளாளுக்கு அட்வைஸ் என்கிற பெயரில், மெடுல்லா ஆப்லெங்கேட்டாவில் மாறி மாறி அடிப்பார்கள்.

‘‘என்ன பிரச்னை வந்தாலும் கம்பெனியின் சர்வீஸ் சென்டரில் காரை சர்வீஸ் விடுவதுதான் பெஸ்ட். ஸ்பேர் பார்ட்ஸ் ஒரிஜினலாகக் கிடைக்கும்; வாரன்ட்டி பிரச்னையும் வராது. ஆனால், ரோடு சைடு மெக்கானிக்கிடம் சர்வீஸ் விட்டால், ஏதாவது போலியான ஸ்பேர்பார்ட்ஸ் மாத்திடுவாரோனு பயந்துக்கிட்டே இருக்கணும்!’’

‘‘கம்பெனி சர்வீஸ் செம டார்ச்சர். ஜாப்கார்டு போட்டு, காசையும் கட்டிட்டு ஜெயில்ல நிக்கிறது மாதிரி வரிசையில நிக்கணும். சர்வீஸ்ல என்ன நடக்குதுனே தெரியாது. சைடு மிரர் ஆடுதுனு போய் நின்னாக்கூட, பில் பழுத்துடும். இதுக்கு ரோடு சைடு மெக்கானிக் எவ்வளவோ தேவலாம்!’’

- இப்படி சர்வீஸ் பற்றி பலரும் புலம்புவது ஓரளவு உண்மையோ என்றும் தோன்றும். இதில் யார் சொல்வதை நம்புவது?  கம்பெனி சர்வீஸ் சென்டரில் கிடைக்கும் நம்பகத்தன்மை, கட்டுப்படியாகக்கூடிய ரேட்டில், ரோடு சைடு மெக்கானிக்கிடம் கிடைக்கக்கூடிய பர்சனலைஸ்ட் சர்வீஸ் என இரண்டும் வேண்டும்! இந்தத் தேவையை தொழில்நுட்பத்தின் துணைகொண்டு யாராவது தீர்த்துவைக்க யோசனை சொல்ல முடியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick