எந்திரன் - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
விரயமாகும் இன்ஜின் சக்தி!தொடர் / தொழில்நுட்பம்பரணிராஜன்

ரு இன்ஜினின் பயனுறுதிறனை(Efficiency) - செய்யப்பட்ட வேலைக்கும், கொடுக்கப்பட்ட வெப்ப ஆற்றலுக்குமான விகிதமாகக் கணக்கிடலாம்.

பயனுறுதிறன் (Efficiency)

இன்ஜினில் குறிப்பிட்ட அளவு எரிபொருளை எரிப்பதால் கிடைக்க வேண்டிய மொத்த ஆற்றலும், நமக்குத் தேவையான இயந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறதா என்றால், இல்லை. உள்ளே கொடுக்கப்படும் ஆற்றலில் 25 முதல் 30 சதவிகிதம் வரையான ஆற்றலே, வாகனத்தைச் செலுத்துவதற்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது. மொத்த ஆற்றலும் எங்கே, எப்படிச் செலவாகிறது?

இன்ஜின் இழப்புகள் 62.4 சதவிகித எரிபொருளின் ஆற்றல் முழுவதும் இன்ஜினிலேயே செலவாகிறது. இன்ஜின் பாகங்களின் உராய்வு, காற்றினை உள்ளே - வெளியே பம்ப் செய்வதற்குத் தேவையான ஆற்றல், வீணாக வெளியேறும் வெப்பம் எனப் பலவிதங்களில் எரிபொருளின் ஆற்றல் வீணாகிறது. நவீன இன்ஜின் தொழில்நுட்பங்களான வேரியபிள் வால்வ் டைமிங் (VVT), டர்போ சார்ஜிங், சிலிண்டர் டீ-ஆக்டிவேஷன் (Deactivation) போன்ற முறைகளினால் இந்த இழப்புகள் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படுகின்றன. பெட்ரோல் இன்ஜின்களைவிட டீசல் இன்ஜின்களில் இந்த ஆற்றல் இழப்பின் அளவு குறைவுதான். டீசல் இன்ஜினின் நவீனத் தொழில்நுட்பங்களினால் இந்த இழப்புகள் மேலும் கட்டுப்படுத்தப் படுகின்றன.

ஐடிலிங் இழப்புகள் (Idling losses)

நகரங்களில் கார் ஓட்டும் போது, டிராஃபிக் சிக்னலில் நிற்கும்போது, வாகனத்தை ஐடிலிங்கில் வைத்திருக்கும்போது குறிப்பிடத்தகுந்த அளவு ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. இவை 17.2 சதவிதம் என அளவிடப்படுகிறது. சமீபத்திய கார்களில், காரை நிறுத்தும்போது இன்ஜின் ஆஃப் ஆகிவிடும்படியும், தேவைப்படும் நேரத்தில் ஆக்ஸிலேட்டர்/கிளட்ச்சை அழுத்தினால், உடனே இன்ஜின் இயங்கும்படியும் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இதனால், இந்த ஐடிலிங் இழப்புகளைக் குறைக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick