மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

மஹிந்திரா கார்களில் இனி பெட்ரோல் இன்ஜின்!

2018-ம் ஆண்டுக்கு முன்னதாக தனது வாகனங்கள் அனைத்திலும் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியன்ட்களை அறிமுகப்படுத்துவது என்று மஹிந்திரா முடிவு செய்துள்ளது. பெட்ரோல்-டீசல் இடையேயான விலை வித்தியாசம் குறைந்து வருவதால், டீசல் கார்களின் விற்பனை சரிந்து வருவதே இதற்குக் காரணம். ஆம், ஏப்ரல் 2016 - ஜூன் 2016 வரையிலான காலத்தில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையில் 59 சதவிகிதம் பெட்ரோல் கார்கள்.  மஹிந்திரா விற்பனை செய்யும் KUV1OO காரில் பாதிக்குப் பாதி பெட்ரோல் கார்கள்தான்.

‘’தற்போது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். இனி மஹிந்திரா களமிறக்கும் ஒவ்வொரு புதிய காரும், நாங்கள் தயாரிக்கப் போகும் 1.2 லிட்டர், 1.5 லிட்டர், 2.0 லிட்டர் பெட்ரோல் எனப் பொருத்தமான இன்ஜினுடன் விற்பனைக்கு வரும்’’ எனக் கூறியுள்ளார் மஹிந்திராவின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick