ஜிஎஸ்டி... வரமா, சாபமா?!

ஆட்டோமொபைல் துறை : ஜிஎஸ்டி வரி விதிப்புலதா ரகுநாதன்

ஜிஎஸ்டி (GST - Goods and Service Tax) அமலுக்கு வரும்போது   கார்களின் விலை குறையுமா?

இந்தக் கேள்விக்குள் போவதற்கு முன்பு, ஜிஎஸ்டி என்றால் என்ன என்று, அதற்குக் கொடுக்கப்படும் எளிமையான விளக்கத்தைப் பார்ப்போம்.

வரி, இரண்டு வகைப்படும். முதல் வகை, நேரடி வரி (Direct Tax). உதாரணம், வருமான வரி. இரண்டாவது வகை, மறைமுக வரி (Indirect tax). உதாரணம், தேசிய அளவில் கலால் வரி, கூடுதல் கலால் வரி, சேவை வரி, சுங்க வரி. இவை தவிர, அந்தந்த மாநிலங்களில் விற்பனை வரி, மத்திய விற்பனை வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி, ஆடம்பர வரி, லாட்டரி, பந்தயம் மற்றும் சூதாட்ட வரி போன்றவைகள்.

இப்படி மத்திய அளவில் கொஞ்சம், மாநிலங்கள் தனித்தனியே கொஞ்சம் என்று போட ஆரம்பித்த வரிகள், பொருட்களின் விலையில் ஏற்றம்கொள்ள வைக்கும். முன்னேறிய நாடுகளில் இப்படிப்பட்ட வரி விதிப்பு முறை கிடையாது. வரியின் மேல் வரி என்ற நிலையால்தான், நாம் வாங்கும் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இந்த மறைமுக வரி, நுகர்வோரின் தலையில்தான் விழுகிறது.

இந்த வரி விதிப்பு முறையில் ஒரு மாற்றம்தான் ஜிஎஸ்டி. இது அமலுக்கு வரும்போது, இந்தியா முழுவதும் ஒருங்கிணைக்கப்படும் என்பதால், ஒரு பொருளை எங்கே வாங்கினாலும் அதன் மீது வசூலிக்கப்படும் வரி ஒன்றேதான். இப்படிப்பட்ட ஒருங்கிணைத்த ஜிஎஸ்டி முறையால், வரி விகிதம் 17.9 சதவிகிதம் முதல் 18.9 சதவிகிதம் வரை இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஜிஎஸ்டி வரி திட்டத்தில் மிக அதிகமான நன்மை ஏற்படக்கூடிய துறை, வாகன உற்பத்தித் துறை. இதனால், உற்பத்தியாளருக்கு மட்டுமல்ல, நுகர்வோரான நமக்கும் சில நன்மைகள் உண்டு. உற்பத்தி விலையில் இறக்கம் ஏற்பட்டால், விற்கப்படும் விலையும் குறைக்கப்படும். தவிர, விற்பனையின்போது செலுத்தப்படும் வரி விகிதம் குறைந்தால், அதுவும் நுகர்வோருக்கு லாபமே! ஆக, இரண்டு வழிகளிலும் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

மோட்டார் வாகன உற்பத்தியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, உதிரி பாகங்களாகச் செய்து, அவற்றை அசெம்பிள் செய்து காராக மாற்றுவது ஒரு விதம்; மற்றொன்று, CBU (Completely Built Unit) எனப்படும் காரை முழுமையாக இறக்குமதி செய்வது. முதலில் சொன்னதில்கூட, உதிரி பாகங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டால், ஜிஎஸ்டி-யின் பலன் அதிகமாக இருக்கும். CBU-ல் விலையைக் குறைப்பதற்கான காரணம் எதுவும் இல்லை. உதாரணத்துக்கு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கார் என்று வைத்துக்கொள்வோம். தற்போதைய வரிவிதிப்பு எப்படி இருக்கிறது?

கார்களின் மீதான உற்பத்தி வரி, VAT, CST, (National Calamity Contingent Duty) இவை எல்லாம் சேர்ந்து சின்ன கார்களுக்கு 30.4 சதவிகிதம் வரி, மீடியம் அளவு கார்களுக்கு 44.5 சதவிகிதம் வரி, எஸ்யுவி/எம்பிவி மீது 52 சதவிகிதம் வரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick