ராலி ஜாலி! - புதிய பாதை புதிய இடம் புதிய மனிதர்கள்... | Maruti Suzuki Dakshin Dare 2016 - Motor Vikatan | மோட்டார் விகடன்

ராலி ஜாலி! - புதிய பாதை புதிய இடம் புதிய மனிதர்கள்...

மாருதி சுஸூகி: தக்‌ஷின் தேர் ராலிகா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்

வ்வோர் ஆண்டும் கர்நாடகா, கோவா மாநிலங்களில் நடத்தும் தக்‌ஷின் டேர் ராலி, மாருதிக்கு மிக முக்கியமான நிகழ்வு. தக்‌ஷின் டேர் ராலிக்கு இது எட்டாவது ஆண்டு. மொத்தம் 190 வீரர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் 110 அணிகள் பங்கேற்றிருந்தன. இதில் 16 பேர் பெண்கள். எண்ட்யூரன்ஸ், அல்ட்டிமேட் கார், அல்ட்டிமேட் பைக் ஆகிய மூன்று பிரிவுகளில் ராலி நடைபெற்றது. கடந்த ஜூலை 31-ம் தேதி பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் துவக்கி வைக்கப்பட்ட ராலி, ஆகஸ்ட் 6-ம் தேதி கோவாவில் நிறைவடைந்தது. மொத்தம் சுமார் 2,200 தூரம் நடந்த ராலியில் சிக்கல்கள், சவால்கள், சறுக்கல்கள், சாதனைகள் என கதம்பமான கொண்டாட்ட நிகழ்வாக நிறைவடைந்தது தக்‌ஷின் டேர் ராலி.

முதல் நாள் காலை 5 மணிக்கு ராலி ஆரம்பம் என்று சொல்லப்பட்டது. ஆனால், கர்நாடக முதல்வரின் மகன் இறந்துவிட்டதால், பெங்களூருவை ஒட்டி ராலி நடத்துவது சரியாக இருக்காது என, வேகமாகச் செல்லும் எக்ஸ்ட்ரீம் கார் மற்றும் பைக் பிரிவு போட்டியை ரத்து செய்துவிட்டனர். நேரம், வேகம், தூரம் ஆகியவற்றைக் கணக்கிட்டுக்கொண்டெ செல்லும் TSD எனப்படும் எண்ட்யூரன்ஸ் ராலி சாதாரண சாலையில் நடப்பது என்பதால், அது மட்டும் பெங்களூருவில் இருந்து கூர்க் வரை நடைபெற்றது. இரண்டாவது நாள் கூர்க்கில் உள்ள காபி எஸ்டேட்டுகளில்தான் போட்டி. இதற்காகவே உருவாக்கப்பட்டதுபோன்ற பாதைகள், காபி எஸ்டேட்டுகளில் காணக்கிடைத்தன. அவ்வப்போது தூறும் மழை, சேறும் சகதியுமாக சாலை, கல்லும் தண்ணீருமாகக் கிடந்த நிலத்தில் எக்ஸ்ட்ரீம் பிரிவு கார்களும் பைக்குகளும் சீறிக்கொண்டு செல்ல... காபித் தோட்டத் தொழிலாளர்கள் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டனர். ஈரமான மண் சாலையில், முதலில் எக்ஸ்ட்ரீம் பிரிவு கார்கள் சீறிச் செல்ல...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick