நானும் ரேஸர்தான்!

ஃபோக்ஸ்வாகன் ரேஸ்: போலோ, வென்ட்டோதமிழ், படங்கள்: கே.சக்திவேல்

‘‘சாதா கார் ஓட்டியிருப்பீங்க; ரேஸ் கார் ஓட்டியிருக்கீங்களா?’’ என்று வலுக்கட்டாயமாக நம்மை அழைத்திருந்தது ஃபோக்ஸ்வாகன். சென்னை இருங்காட்டுக்கோட்டை மைதானத்தில் வழக்கமாக நடக்கும் ரேஸ் போட்டிகளுக்கு மாறாக, பத்திரிகையாளர்களுக்கான ரேஸிங் ஒர்க் ஷாப்பில் கலந்துகொள்வதற்குத்தான் நமக்குச் சிறப்பு அழைப்பு.

‘எங்கே பூ மிதிக்கணும்?’ என்று கவுண்டமணி கேட்பதுபோல, ‘எதுல ரேஸ் ஓட்டணும்?’ என்று ஆர்வமாகக் கேட்ட நம் முன்னே இரண்டு கார்களை நிறுத்தினார்கள். ‘போலோவா இது’ என்று முதலில் நாமே நம்பவில்லை. ‘‘இது வென்ட்டோ’’ என்று இன்னொரு செடானையும் காட்டினார்கள். ‘பாகுபலி’ ராணா மாதிரியும், காட்டெருமை மாதிரியும் கட்டுக் கடங்காமல் திமிறக் காத்திருந்தன போலோவும் வென்ட்டோவும். போலோவின் ரோல் கேஜை, சேஸியுடன் வெல்டிங் செய்திருந்தார்கள். ரேஸிங்கின்போது, எதிர்பார்க்காத அளவு ஸ்டெபிலிட்டியையும், சென்டர் ஆஃப் கிராவிட்டியையும் தருவதற்காகவே இந்த ஐடியா. ரேஸிங்கின்போது செய்ய வேண்டியது; செய்யக்கூடாது என்பது பற்றிப் பாடம் எடுத்தார் பயிற்சியாளர் பனாஜி. இவர் ஃபோக்ஸ்வாகனின் மல்ட்டி நேஷனல் கார்ட்டிங் சாம்பியன். பாடத்தை உன்னிப்பாக உள்வாங்கியபடி, ஹெல்மெட்டை அணிந்துகொண்டு காரில் ஏறினோம். போலோவில் மேனுவல் கியர்பாக்ஸ்தான். முதல் கியரைத் தட்டி, கிளட்ச்சை ரிலீஸ் செய்ததும், 2,000 rpm-க்கு மேல் எகிறியது போலோ. 140bhp பவர், 24kgm டார்க். வாவ்! நம் கணக்குப்படி, 0-100 கி.மீ-யை ‘பத்து எண்றதுக்குள்ள’ கடந்திருந்தோம். ஸ்ட்ரெச் ட்ராக்கில் போலோ, 110 கி.மீ வரை சாதாரணமாகப் பறந்தது.

வென்ட்டோவின் பெர்ஃபாமென்ஸ் அதுக்கும் மேல! 180bhp பவர், 25kgm டார்க். ‘ஸ்போர்ட்’ மோடை ஆன் செய்துவிட்டுக் கிளம்பினால், ஆரம்பமே 3,000 rpmதான். வென்ட்டோவில், ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என நேர்கோட்டில் பறந்துகொண்டிருந்தோம். சட்டென ஒரு கார்னர். ‘எப்படித்தான் ரேஸர்ஸ், கார்னர்ஸைச் சமாளிக்கிறாங்களோ?’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick