ஃபார்முலா-1 கார் தெறி சீக்ரெட்ஸ்! | Formula -1 car Secrets - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஃபார்முலா-1 கார் தெறி சீக்ரெட்ஸ்!

ஒண்ணேகால் மணி நேரத்தில் சென்னை to மதுரை... - லிட்டருக்கு 1.5 கி.மீ மைலேஜ்!சீக்ரெட்ஸ்: ஃபார்முலா-1 கார்தமிழ்

 

லகின் அதிவேகமான, காஸ்ட்லியான, த்ரில்லிங்கான, ஆபத்தான விளையாட்டு, மோட்டார் ஸ்போர்ட்ஸ்தான். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற வார்த்தை, ஃபார்முலா-1 பந்தயங்களுக்குப் பொருந்தும். ஃபார்முலா-3, ஃபார்முலா-2 போன்ற பார்ட்களில் கலந்து ஜெயித்த பிறகுதான், ஃபார்முலா-1 பந்தயங்களில் கலந்துகொள்ள முடியும். ‘வாவ்.. செம ஸ்பீடுல’ என்று மணிக்கு 300 கி.மீ வேகத்தில் பறக்கும் ஃபார்முலா-1 கார்களைப் பற்றி ஒற்றை வார்த்தையில் வியந்து கடந்துவிட முடியாது. நம்மோடு 20 ஆண்டுகள் குடும்ப உறுப்பினராக உழைத்துக் கொட்டும் சாதாரண கார்களுக்கும், ஃபார்முலா-1 ரேஸ் கார்களுக்கும் இடையில் ஏராளமான  வித்தியாசங்கள் உண்டு. அப்படிப்பட்ட ஃபார்முலா-1 கார்கள் பற்றிய டாப்-10 ‘வாவ்’ தகவல்கள்...

* ரேஸ் காரின் எடை மொத்தமே 550 கிலோவுக்குள்தான் இருக்கும். இவை, கார்பன் ஃபைபர் என்னும் கெமிக்கலால், 3,272 டிகிரி ஃபாரன்ஹீட்டில் மோல்டு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சாதாரண காட்டன் துணி அளவுதான் இதன் எடை இருக்கும். எடை குறைந்தால்தான் வேகம் இருக்கும் என்பதற்காக இந்த ஐடியா. முதன்முதலில் 1980-ல் மெக்லாரன் டீம்தான், கார்பன் ஃபைபரில் காரைத் தயாரித்தது. அதுதான் இன்றுவரை பின்பற்றப்படுகிறது. சில டீம்கள் பாலிமெரிக் மூலமும் இதைத் தயாரிக்கிறார்கள்.

*  ஃபார்முலா-1 கார்களில் இருப்பது சிங்கிள் சீட்தான். ‘டெத் ரேஸ்’ படத்தில் வருவது போல், துணைக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் நேவிகேட்டரை எல்லாம் காரில் ஏற்றிக்கொண்டு பறக்க முடியாது.

ஃபார்முலா-1 காரின் 10 சிலிண்டர் கொண்ட இன்ஜின்கள், 18,000rpm-ல் 800 முதல் 900bhp பவர் வரை வெளிப்படுத்துகிறது. அதாவது, இதன் பிஸ்டன் 1,000 குதிரை சக்தியில் ஒரு விநாடிக்கு 300 தடவை - ஒரு நிமிடத்துக்கு 18,000 தடவை மேலும் கீழுமாக இயங்கும். உலகின் அதிவேகமான ஃபார்முலா-1 கார் - மெக்லாரன் MP4-20A. இதன் அதிகபட்ச பவர் 920bhp. நம் நாட்டில் குறைந்தபட்ச இன்ஜின் சிலிண்டர், பவர் கொண்ட கார் - டாடா நானோ. 38bhp, 2 சிலிண்டர். ஃபார்முலா-1 கார் இன்ஜின்கள் யூஸ் அண்டு த்ரோ வகையறாவைச் சேர்ந்தவை. இதன் அதிகபட்ச வாழ்நாள் நேரம் - இரண்டே மணி நேரம். போட்டி முடிந்த பிறகு இதை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நடக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick