மிரட்டல் பைக் ஹார்னெட்

ரீடர்ஸ் ரெவ்யூ: ஹோண்டா CB ஹார்னெட் 160Rச.ஜெ.ரவி, படங்கள்: த.ஸ்ரீனிவாசன்

“அப்பாவின் ஸ்ப்ளெண்டர் பைக்கைத்தான் ஓட்டிக்கொண்டு இருந்தேன். காலேஜில் ஃபைனல் இயர் படிக்கும்போது புது பைக் வாங்கும் ஆசை வந்தது. வீட்டில் புதிய பைக் வேண்டும் என்று கேட்டபோது, அப்பா ஓகே சொல்லியிருந்தார். சுஸூகி ஜிக்ஸர்,  யமஹா FZ ஆகிய பைக்குகளை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன். ஒருமுறை என் வீட்டில் இருக்கும் ஆக்டிவாவை சர்வீஸ்விடச் செல்லும்போதுதான், ஹோண்டா ஹார்னெட் 160 பைக்கைப் பார்த்தேன். உடனே டெஸ்ட் டிரைவ் செய்தேன். ஹார்னெட் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்பாவிடம் ஹார்னெட் வாங்குகிறேன் எனச் சொன்னேன். என்ன கம்பெனி என்று கேட்டார். ஹோண்டா என்றதும் உடனே ஓகே செய்தார்.  
                                                                          
ஏன் ஹார்னெட் 160?

முதலில், சுஸூகி ஜிக்ஸர் அல்லது யமஹா FZ வாங்குவதுதான் திட்டம். நம் ஊர் டிராஃபிக்குக்கு ஃபேரிங் வைத்த பைக் ஓட்டுவது சவாலான விஷயம். அதனால், ஃபேரிங் இல்லாமல் சுலபமாக பார்க்கிங் செய்வது போன்ற, ஸ்டைலான பைக்கைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். விளம்பரம் எதையும் பார்க்கவில்லை. எந்த ஐடியாவும் இல்லாமல்தான் ஹார்னெட் பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்தேன். பிடித்துப்போனதால் புக் செய்துவிட்டேன்.

ஷோரூம் அனுபவம்

கோவை சாய்பாபா காலனியில் இருக்கும் சந்திரா ஹோண்டா ஷோரூமில் ஹார்னெட் புக் செய்தேன். ஐந்து வண்ணங்களில் என்னைக் கவர்ந்தது பியர்ல் ஸைரன் ப்ளூ. அந்த கலருக்கு 15 நாட்கள் வெயிட்டிங் பீரியட் என்றார்கள். பின்பு ஒரு மாதம் ஆகும் என்றார்கள். அதற்கு பிறகும்கூட அந்த கலர் கிடைக்கவில்லை. அதற்கு மாறாக, ‘‘பியர்ல் நைட்ஸ்டார் பிளாக் இருக்கு. டெலிவரி எடுத்துக்கிறீங்களா?’’ என்று கேட்டார்கள். ‘‘ப்ளூ கலர் வேண்டும் என்றால், இன்னும் ஒரு மாதம் ஆகும்’’ என்றார்கள். அதனால், வேறு வழியின்றி ப்ளாக் கலரை எடுத்தேன். விரும்பிய நிறத்தில் பைக் வாங்க முடியவில்லையே என்பதில் வருத்தம்தான். அதேபோல், சர்வீஸிலும் ஏமாற்றம்தான். முதல் சர்வீஸ் சென்றபோது, சொன்னது போல சர்வீஸ் செய்யவில்லை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick