குற்றாலம்... இல்லேனா கும்பவுருட்டி! | Mahindra TUV 300 - Readers Tour - Motor Vikatan | மோட்டார் விகடன்

குற்றாலம்... இல்லேனா கும்பவுருட்டி!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்: மஹிந்திரா TUV 3OOதமிழ், படங்கள்: க.சதீஷ்குமார்

சொளகு வீடு, மொளகா வீடு, சிங்கப்பூர் வீடு, கப்பல் வீடு என்று ஊர்ப் பக்கங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பட்டப் பெயர் இருப்பதுபோல, கௌதம் விஸ்வநாத் குடும்பத்துக்கும் ஒரு பெயர் இருக்கிறது. ‘‘மஹிந்திரா கார்களா வெச்சிருப்பாங்களே... அவங்க வீடு எது?’’ என்று கும்பகோணத்தில் இறங்கிக் கேட்டால், ரொம்ப ஈஸியாக வழிகாட்டிவிடுவார்கள். ‘‘மஹிந்திரா குடும்பம் உங்களை வரவேற்கிறது!’’ என்று தங்கள் கராஜுக்கு வரவேற்றார்கள் கௌதமும், அவரது மாமா கண்ணதாசனும். ஸாங்யாங் ரெக்ஸ்ட்டன் காரைத் தவிர பொலேரோ, ஸ்கார்ப்பியோ, நுவோஸ்போர்ட், வெரிட்டோ, KUV, TUV என்று எல்லா மஹிந்திரா கார்களும் வரிசை கட்டி நின்றிருந்தன. ‘ஒருவேளை மஹிந்திரா ஷோரூமுக்கு வந்துட்டோமோ’ என்று திகைத்துப்போன நம்மிடம், ‘‘உண்மையிலேயே நாங்க மஹிந்திரா ஃபேமிலிங்க... மஹிந்திராவுல இருக்குற எல்லா கார்களும் நம்ம வாசல்ல இருக்கும். இப்போகூட புது ஸைலோ புக் பண்ணியிருக்கோம். அதை விடுங்க... இப்போ கிரேட் எஸ்கேப்புக்கு எதுல போலாம்னு இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப் பார்த்துடலாமா...?’’ என்று களத்தில் இறங்கினார் கௌதம்.

‘‘நினைச்ச மாதிரியே TUV வந்துச்சுடா... ஃபால்ஸ்ல குளிச்சு ரொம்ப நாளாச்சு... குற்றாலம் பின்னாடி இருக்கிற கும்பவுருட்டி ஃபால்ஸ் போய்ட்டு நனைஞ்சுட்டு வந்துடலாம். கௌம்புடா மாப்ளே!’’ என்று உற்சாகமானார் கண்ணதாசன்.

கௌதமின் இங்க்கி பிங்க்கியில் ஜெயித்ததுபோல், எஸ்யுவி மார்க்கெட்டில் TUV அவ்வளவாக ஜெயிக்க முடியவில்லை. இருந்தாலும் பட்ஜெட் விலையால், கௌதம் மாதிரி கார் ஆர்வலர்களைத் தக்கவைப்பதில் ஜெயித்திருக்கிறது மஹிந்திரா. TUV ஹை எண்ட் மாடலின் ஆன்ரோடு விலையே 11 லட்ச ரூபாய்தான். ‘‘நானும் எப்பவாச்சும் டாப்-10 பட்டியல்ல TUV வந்துடுமான்னு பார்க்குறேன்; நடக்க மாட்டேங்குது! ஏன்னு தெரியலை...’’ என்று பெயருக்குக் கவலைப்பட்டாலும், மஹிந்திரா கார்கள் பற்றிப் பேசினால் மிகவும் உற்சாகமாகிறார் கௌதம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick