வலிமையான ஆயுதம்!

சூப்பர் கார் - ஃபோர்டு மஸ்டாங்கா.பாலமுருகன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

ஸராட்டி, ஃபெராரி, ஃபோர்ஷே, லம்போகினி போன்ற பறக்கும் கார்களின் விற்பனை, இப்போது கவனம் ஈர்த்திருக்கிறது.  இந்தப் பட்டியலில் இப்போது மஸ்டாங்கும் சேர்ந்திருக்கிறது.

ஃபோர்டு நிறுவனத்தின் பேர் சொல்லும் இதை, அமெரிக்க ஆட்டோமொபைல் துறையின் அடையாளம் என்று சொல்பவர்களும் உண்டு. 1964-ல் காரை ஃபோர்டு அறிமுகம் செய்தது. தலைமுறைகள் தாண்டி, பல்வேறு வடிவங்கள் மாறி, காலத்துக்கு ஏற்ற பவர் மாற்றங்களுடன் வெளியாவதுதான் மஸ்டாங்கின் பலம். கார் ஆர்வலர்களின் கனவு காரான இது, இந்தியாவுக்கு வருமா, வராதா என ஆருடம் சொல்வதிலேயே ஆண்டுகள் பல கழிந்தன.

கடந்த ஆண்டு இறுதியில் தடாலென இந்தியாவில் அறிமுகம் செய்தது ஃபோர்டு. இறக்குமதி செய்து விற்பனை செய்வதால், விலை சற்று அதிகம்தான். ஆனால், மற்ற சூப்பர் கார்களை ஒப்பிடும்போது, மஸ்டாங் விலை குறைவு. ஆனாலும், பெர்ஃபாமென்ஸ் கார் பிரியர்களுக்கு விலை ஒரு தடையா என்ன! மஸ்டாங், ஸ்போர்ட்ஸ் காரா, சூப்பர் காரா... என நமக்கு குழப்பம் ஏற்படும். 137 மிமீ கிரண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த கார், நம் நாட்டின் ஸ்பீடு பிரேக்கர்களுக்குத் தாங்குமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick