இது 3 in 1 வாகனம்! | Multix 3 in 1 Vehicle - Motor VIkatan | மோட்டார் விகடன்

இது 3 in 1 வாகனம்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மல்ட்டிக்ஸ்தமிழ் - படங்கள்: தென்றல்

‘லோடு அடிக்கிற ட்ரக்கா...’ என்றால், ‘இல்லை; கார்’ என்கிறார்கள். ‘5 பேர் போற மாதிரி இருக்கே... அப்போ, காரா?’ என்றால், ‘இல்லை; ஆஃப்ரோடு வெஹிக்கிள்’ என்கிறார்கள். ‘ஏதோ ஜெனரேட்டர் ஓடுதே... எலெக்ட்ரிக் வெஹிக்கிளா...’ என்றால், ‘இல்லை; கரன்ட் தயாரிக்கலாம்’ என்கிறார்கள்.

‘புரியலையே’ என்று புருவம் உயர்த்திய நம்மிடம் பேசினார், ‘ஐஷர்-போலாரிஸ்’ நிறுவனத்தின் இந்திய CEO பங்கஜ் துபே. ‘‘நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் போன் பேச மட்டும்தானா அதைப் பயன்படுத்துகிறீர்கள்? எத்தனை வேலைகள் செய்கிறது உங்கள் ஸ்மார்ட்போன்! இப்படி ஒரு மல்ட்டி ஃபங்ஷனல் வேலையைச் செய்வதால்தான் இதற்கு மல்ட்டிக்ஸ் என்று பெயர். டெஸ்ட் டிரைவ் செய்தால், உங்களுக்கே புரியும்!’’ என்றார்.

இந்திய ட்ரக் தயாரிப்பு நிறுவனமான ஐஷர், அமெரிக்காவைச் சேர்ந்த போலாரிஸ் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து இந்த ‘மல்ட்டிக்ஸ்’ வாகனத்தைத் தயாரித்திருக்கிறது. 4 வீல் டிரைவ் வாகனமான இதில் உச்சகட்டமாக ஆஃப் ரோடும் செய்யலாம் என்று நிரூபிக்கும்வண்ணம், இதற்கென உருவாக்கிய கரடுமுரடு டெஸ்ட் டிராக்கில் ஒரு ரஃப் அண்டு ஸாஃப்ட் டிரைவ் செய்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick