க்ரூஸ்... நல்லா பண்ணலாம் க்ரூஸ்!

பழைய கார் மார்க்கெட் - செவர்லே க்ரூஸ்தமிழ் - படங்கள்: எம்.விஜயகுமார்

காரே இல்லாதவர்கள், ‘ஆல்ட்டோவாவது வாங்கணும்’ என்று ஆசை வைத்திருப்பார்கள். ஆல்ட்டோ, ஸ்விஃப்ட் வைத்திருப்பவர்கள் அடுத்த கட்டத்துக்குத் தாண்டி, ‘ஹோண்டா சிட்டிக்குப் போகணும்’ என்று விரும்புவார்கள். செடான் வைத்திருப்பவர்களின் அடுத்த டார்கெட், பிரீமியம் செடானாகத்தான் இருக்கும். மிடில் க்ளாஸ் பவர் விரும்பிகளின் சாய்ஸில் முன்னணியில் இருக்கும் கார், செவர்லே க்ரூஸ். ஏனென்றால், பிரீமியம் செடான் கார்களில் குறைந்த விலைகொண்ட பெருமை (ஆரம்ப விலை `16 லட்சம்) செவர்லே க்ரூஸுக்கு உண்டு. அதனால், க்ரூஸுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. புது மார்க்கெட்டில் மட்டுமல்ல; பழைய கார் மார்க்கெட்டிலும் க்ரூஸுக்கு நல்ல மதிப்பு இருப்பதை, நாமக்கல்லில் உள்ள ஒரு பழைய கார் ஷோரூமுக்கு ஒரு விசிட் அடித்தபோது தெரிந்துகொண்டோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick