மோட்டார் கிளினிக் - கேள்வி - பதில்

எனக்கு 40 வயதாகிறது. உயரம் 5.6’’. எடை 93 கிலோ. பணி நிமித்தமாக தினசரி 60 கி.மீ தூரம் பைக்கில் பயணிப்பதால், முதுகுவலி பிரச்னை இருக்கிறது. எந்த பைக் எனக்குப் பொருத்தமானதாக இருக்கும்?

- கார்த்திகேயன், இமெயில்.

நீங்கள் உங்கள் பட்ஜெட்டைக் கூறவில்லை. ஆனாலும் உங்களது தேவைகளை வைத்துப் பார்க்கும்போது, பஜாஜ் பல்ஸர் 150 சரியான பைக்காக இருக்கும். இது அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், டிஸைன் ஓரளவுக்கு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கிறது. 150சிசி செக்மென்ட்டில், பல வசதிகள் பல்ஸரில் அறிமுகமான பின்புதான் போட்டியாளர்கள் விழித்துக்கொண்டார்கள். இதில் இருக்கும் 150சிசி இன்ஜின், பெர்ஃபாமென்ஸையும் - மைலேஜையும் சமவிகிதத்தில் கொண்டிருக்கிறது. பல்ஸரின் சிறப்பான ஓட்டுதல் தரத்துக்கு, பைக்கின் சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் கச்சிதமான சைஸில் இருக்கும் டயர்கள் துணைநிற்கின்றன. பைக் சற்று அதிக எடையில் இருப்பதுபோலத் தோன்றினாலும், அதுதான் அதிக வேகங்களில் பைக்கின் நிலைத்தன்மைக்குக் கைகொடுக்கிறது. குறைவான பராமரிப்புச் செலவுகளுடன், சரியான விலையில் விற்பனை செய்யப்படும் பல்ஸர் 150 பைக்தான், ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் டாப்-10 பைக் பட்டியலில் இருக்கும் ஒரே 150சிசி பைக்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick