போர் அடிக்காத டூர் பைக்!

ரீடர்ஸ் ரெவ்யூ - ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்தமிழ் - படங்கள்: பா.காளிமுத்து

ஹாய்... நான் சத்ருஹன். அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜீனியரா இருந்தேன். இப்போ பெங்களூரில் வேலை. கீழ்ப்பாக்கத்தில் தங்கியிருக்கேன். வாரா வாரம் டூர் அடிப்பேன். எனக்கு கார் ஓட்டுறது சுத்தமா பிடிக்காது; எல்லாமே பைக்தான். ஆனா என் மனைவி, பொண்ணுக்கு கார்தான் ஃபேவரைட். ஹூண்டாய் கார்கள் வெச்சுருக்காங்க. நான் அடிப்படையிலேயே கொஞ்சம் ரஃப் அண்டு டஃப் டைப். ஆனா, ரூல்ஸ் பயங்கரமா ஃபாலோ பண்ணுவேன். ஹெல்மெட், க்ளோவ்ஸ் போடாம பைக்கை ஸ்டார்ட்கூடப் பண்ண மாட்டேன். அப்பா யெஸ்டி வெச்சுருந்தார். நான் அதைப் பார்த்தே வளர்ந்தவன். பெரியவனானதும் புல்லட் மேல ஆசை. நம்ம ரஃப் அண்டு டஃப்புக்கு அதுதானே கரெக்ட்டா இருக்கும்? இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். காரணம், இந்த ஹிமாலயன்! புல்லட் வாங்கலாம்னு போன என்னை ஃபர்ஸ்ட் சைட்லேயே வீழ்த்திடுச்சு ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick