கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம் - கேட்ஜெட்ஸ்துரை.நாகராஜன்

அசுஸ் - ஜென்போன் 3s மேக்ஸ்

பட்ஜெட் விலைக்குக் கிடைக்கும் மொபைல்களின் வரிசையில், அசுஸ் முக்கியமான ஒன்று. இந்த நிறுவனம் கடந்த ஜனவரியில் ‘ஜென்போன் 3s மேக்ஸ்’ என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அலுமினியம் மெட்டல் பாடியுடன் 5.2 இன்ச் HD ஸ்கிரீன், 3 ஜிபி ரேம், 1.5GHz octa-core MediaTek MT6750 பிராசஸர், 5000mAh பேட்டரி, பிங்கர் பிரின்ட் சென்ஸார் என அசத்தலாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. டூயல் சிம், டூயல் 4ஜி வசதி கொண்டது. 8 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமராவும், 13 மெகா பிக்ஸல் ரியர் கேமராவும் கொண்ட இது ஆண்ட்ராய்டு நவ்கட் 7.0 மென்பொருளில் இயங்கும். இதில், இன்டெர்னல் மெமரி 32 ஜிபி தரப்பட்டாலும், 2,000 ஜிபி  வரை மெமரியை அதிகரித்துக் கொள்ள முடியும். அதிக பேட்டரி - மெமரி, நல்ல கேமரா, ரேம், பிராசஸர் ஆகியவற்றில் இந்த மொபைல் அசத்துகிறது. இதன் பேட்டரி பவரை வைத்து மற்ற மொபைல்களுக்கும் சார்ஜ் செய்ய முடியும் என்பது இதன் தனித்ததுவம். லெனோவா பி2, ரெட்மி நோட் 4 ஆகிய டாப் ரக மொபைல்களுக்கு  போட்டியாக இருக்கும் இந்த மொபைலின் விலை 15,000 ரூபாய்.

ப்ளஸ்: ஆண்ட்ராய்டு 7.0 நவ்கட், வடிவமைப்பு, பேட்டரி திறன், 2000 ஜிபி மெமரிகார்டு ஸ்லாட்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick