ACCESSORIES

ஆக்சஸரீஸ் - கார்தமிழ்

புளூடூத் FM ட்ரான்ஸ்மீட்டர்

TEWTROSS விலை: ரூ 2,000

சில பட்ஜெட் ஹேட்ச்பேக்குகளில், ஸ்டீரியோ வசதி இருக்கும். ஆனால், புளூடூத் கனெக்ட்டிவிட்டி இருக்காது. கார் ஓட்டும்போது போன் அழைப்பு வந்தால், ஒன்று - பேசாமல் இருக்கலாம் அல்லது நிறுத்திவிட்டுத்தான் பேச வேண்டியிருக்கும். புளூடூத் கனெக்ட்டிவிட்டி இருந்தால், சிங்கிள் டச்சில் ஆன் செய்து பேசிக்கொள்வதுதான் புளுடூத் FM ட்ரான்ஸ்மீட்டரின்் ஸ்பெஷல். இதில் அதிக ஆப்ஷன்களூம் கொடுத்திருக்கிறார்கள். இதை ஹேண்ட்ஸ்ஃப்ரீயாகவும் பயன்படுத்தி, சிங்கிள் டச் செய்துவிட்டு கார் ஸ்பீக்கர்கள் மூலம் போன் பேசிக் கொள்ளலாம். FM ஆகவும் பயன்படுத்தி பாட்டுக் கேட்கலாம். புளூடூத், மைக்ரோ SD கார்டு, (MP3, WMMA, WAV, FLAC ஃபார்மேட் சப்போர்ட் உண்டு), USB ஃப்ளாஷ் டிஸ்க், 3.5மிமீ ஆடியோ கேபிள், MP3 ப்ளேயர், டேப்லட் போன்ற மல்ட்டி மீடியா ஆப்ஷன்களிலும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது தவிர மொபைல் போன்கள், டேப்லட்கள் போன்றவற்றுக்கு சார்ஜிங் பாயின்ட் ஆகவும் பயன்படுத்தலாம். மெமரி கார்டைச் சொருகி, பாட்டும் கேட்கலாம். ஐபோன், சாம்சங், மோட்டோ, லெனோவா, HTC, பிளாக்பெர்ரி, சோனி, iPod போன்ற எல்லாவகையான கேட்ஜெட்களிலும் இதை கனெக்ட் செய்யலாம். கிட்டத்தட்ட 2,000 ரூபாய் விலைக்கு இது ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick