இமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்!

பயணம் : அனுபவம் இரா.கலைச்செல்வன்

மயமலைக்கும் ராயல் என்ஃபீல்டுக்கும் இருக்கும் ஒரு நெருங்கிய தொடர்புதான் அவர்களின் ஒரு பைக்குக்கே ‘ஹிமாலயன்’ எனப் பெயர் வைக்கக் காரணம். இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவிலிருக்கும் பைக் ரைடர்களின் கனவு இமயமலை யில் பைக் ஓட்ட வேண்டும் என்பது தான். அதிலும் பெரும்பாலான வர்களின் கனவு, ராயல் என்ஃபீல்டின் ஏதாவது ஒரு பைக்கில் இமயமலையைத் தரிசித்துவிட வேண்டுமென்பதுதான். `ஏன் இப்படி?’ என்ற கேள்விக்கு... ‘குணா’ பாணியில் ‘மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல’ என்ற பதிலைத்தான் சொல்ல வேண்டும். இப்படி, இமயமலையின் இனம்புரியாக் காதலோடு திரியும் தங்கள் ரைடர்களுக்காக, ஒவ்வொரு வருடமும் ராயல் என்ஃபீல்டு நடத்தும் நிகழ்வுதான் ‘ஹிமாலயன் ஒடிசி’.

14-வது வருட ஹிமாலயன் ஒடிசி ஜூலை 12-ம் தேதி டெல்லியின், இந்தியா கேட் பகுதியிலிருந்து தொடங்கியது. இந்தியா முழுவதிலுமிருந்து ஆறு பெண்கள் உட்பட 61 ரைடர்கள் தங்கள் புல்லட்களில் தயாராக நின்றுகொண்டிருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து வேலூர் மற்றும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த இருவர் இந்த ரைடில் கலந்து கொண்டனர். டெல்லியின் குளிர் அங்கு நின்றிருந்த கிளாசிக், ஸ்டாண்டர்டு, தண்டர்பேர்டு, ஹிமாலயன் என அனைத்து பைக்குகளையுமே நனைத்துக்கொண்டிருந்தது. அந்தக் குளிரைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், அத்தனை ரைடர்களுமே படு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருந்தனர். மொத்த ரைடர்களின் ஹெல்மெட்களுமே சீராக அடுக்கி வைக்கப் பட்டிருக்க, அங்கு வந்த சில புத்த ‘லாமா’க்கள் அதைப் பூஜித்து, அனைவரையும் ஆசீர்வதித்தார்கள். இந்த ‘போதி தர்மர்’ மொமன்ட்டைத் தொடர்ந்து, சில ‘போதனை’ மொமன்ட்கள் தொடர்ந்தன. மலைப் பாதைகளில் பைக்கை எப்படிக் கையாள வேண்டும், ரூட் என்ன, அடுத்த பிட் ஸ்டாப் எது என்பது போன்ற தகவல்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick