மங்களூரிலிருந்து மழைப் பயணம்!

மஹிந்திரா: மான்சூன் ராலிகா.பாலமுருகன்: படங்கள்: தி.விஜய்

ஹிந்திரா நிறுவனம் நடத்தும் மான்ஸூன் சேலஞ்ச் ராலி, TSD (நேரம், வேகம், தூரம்) ராலி பிரியர்களுக்கு முக்கியமான நிகழ்வு. மஹிந்திராவுக்கு இந்த ராலி, ஏழாவது சீஸன். மொத்தம் மூன்று நாள்கள் நடக்கும் இந்தப் போட்டி, ஜூன் 23 அன்று மங்களூரில் உள்ள ஃபோரம் பைஸா மாலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சேலஞ்ச், அமெச்சூர், கார்ப்பரேட், லேடீஸ், கப்பிள், மீடியா என 6 பிரிவுகளில் மொத்தம் 30 மஹிந்திராவின் கார், ஜீப், எஸ்யூவி கார்கள் கலந்துகொண்டன. அதில் மீடியா பிரிவில், KUV100 காருடன் மோட்டார் விகடனும் கலந்துகொண்டது. அடுத்த நாள் காலை 8 மணிக்கு, மங்களூர் புறநகரிலிருந்து ராலி ஆரம்பமானது. அணிவகுத்து நின்ற கார்கள், சாரல் மழையில் குளித்தபடியே, கிராமச் சாலைகளுக்கும் ரூட் மேப் காட்டிய வழியில் ஊர்ந்தன. காட்டுப்பகுதிக்குள் நுழைந்ததும், இலக்கில்லாத பயணமாக அது மாறிவிட்டது. ஆளரவமற்ற காட்டுச் சாலையில் வழி தவறினால் கேட்கக்கூட ஆளில்லை. ஆனால் எந்த காரும் வழி மாறாமல், சரியான சாலையில் சென்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick