டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா | Volkswagen Tiguan Vs Hyundai Tucson - Competition - Motor Vikatan | மோட்டார் விகடன்

டிகுவானும் டூஸானும்! - விக்ரம் Vs வேதா

போட்டி : ஃபோக்ஸ்வாகன் டிகுவான் VS ஹூண்டாய் டூஸான்தமிழ்

ஜினிக்குப் போட்டி கமல்; விஜய்க்குப் போட்டி அஜீத் என்பதுபோல், ஆட்டோமொபைல் மார்க்கெட்டிலும் சில பொசிஷன் விதிமுறைகள் உண்டு. சினிமா நடிகர்களின் மார்க்கெட்டை முடிவு செய்வது கலெக்ஷன்தான். அங்கே வசூல் என்றால், இங்கே விலை. இதை வைத்துத்தான் ‘இதுக்குப் போட்டி இது’ என்று முடிவு செய்கிறார்கள். அதேபோல் ஆடி Q3, பிஎம்டபிள்யூ X1 போன்ற ஜெர்மன் எஸ்யூவிகளுக்குப் போட்டியாகத்தான் டிகுவான் எனும் எஸ்யூவியை, 38.5 லட்சத்துக்கு சென்ற மாதம் களமிறக்கியது ஃபோக்ஸ்வாகன். இதில், ஆடியின் எஸ்யூவி 45 லட்சத்தில்தான் ஆரம்பிக்கிறது. பழைய மாடல் வேறு. பிஎம்டபிள்யூ X1 கிட்டத்தட்ட டிகுவானைவிட 1.5 லட்ச ரூபாய் அதிகம். அதைத் தவிர்த்துவிட்டு, மார்க்கெட்டில் உள்ள சாஃப்ட் ரோடர்களை ஜூம் செய்து பார்த்தால், ‘என்னையும் விளையாட்டுக்குச் சேர்த்துக்குங்க’ என்று வண்டியில் ஏறுகிறது ஹூண்டாயின் புதிய டூஸான். விலையிலும் 7 லட்சம் வித்தியாசம். அப்படியென்றால், இரண்டையும் மோத விடுவதுதானே சரி?!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick