லட்ச ரூபாய் பைக்... சுஸூகி இன்ட்ரூடர்

ஃபர்ஸ்ட் ரைடு / சுஸூகி இன்ட்ரூடர்தொகுப்பு: ராகுல் சிவகுரு, விநாயக் ராம்

ஹார்லி பைக்குகளுக்கு இணையான ரசிகர்களைக்கொண்டது, சுஸூகியின் க்ரூஸர் பைக்கான இன்ட்ரூடர் M1800. ஜிக்ஸர் பைக்கின் 155 சிசி இன்ஜின் மற்றும் சேஸியை அடிப்படையாகக் கொண்டு, இன்ட்ரூடர் பைக்கை அறிமுகம் செய்துள்ளது சுஸூகி. அதாவது, இது சுஸூகி M1800 பைக்கின் மினி வெர்ஷன்.

டிசைன்

ஸ்டைலான ஹெட்லைட், நீளமான பெட்ரோல் டேங்க், வித்தியாசமான இடத்தில் பொசிஷன் செய்யப் பட்டிருக்கும் கீ-ஸ்லாட் என இன்ட்ரூடர் பைக் முழுவதும் அசத்தலான டிசைன் அம்சங்கள் கவர்கின்றன. இதையெல்லாம் இதன் மூத்த அண்ணன்களான இண்ட்ரூடர் M1800 மற்றும் M800 ஆகிய XL சைஸ் க்ரூஸர் பைக்குகளில் இருந்து எடுத்துள்ளது சுஸூகி.  ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒரு 300-400சிசி பைக்கின் தோற்றத்தைக்கொண்டுள்ளது இன்ட்ரூடர்.  ஆனால், தூரத்தில் இருந்து பார்க்கும்போது கவரும் அளவுக்கு, அருகில் இருந்து பார்க்கும்போது இது ஆச்சர்யப்படுத்தவில்லை. டிஜிட்டல் மீட்டர், அலாய் வீல்கள், டயர்கள், ரியர்வியூ மிரர்கள், சுவிட்ச் கியர், சஸ்பென்ஷன், இன்ஜின், பிரேக்ஸ் போன்ற பாகங்களை அப்படியே ஜிக்ஸர் பைக்கில் இருந்து கட் அண்டு பேஸ்ட் செய்திருப்பதே இதற்குக் காரணம். ஆனால் ஜிக்ஸர் பைக்குடன் ஒப்பிடும்போது, ரியர்வியூ மிரர்களில் கூடுதலாக க்ரோம் பூச்சும், இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலில் கூடுதலாக ஏபிஎஸ் லைட்டும், கறுப்பு நிற டிஸ்க் பிரேக் காலிப்பர்களும் இடம்பெற்றுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick