SPY PHOTO - ரகசிய கேமரா

ஸ்பை போட்டோ / XUV5ooராகுல் சிவகுரு

ஹிந்திராவின் முதல் மோனோகாக் - XUV 500. இது, கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகமானது. அட்டகாசமான டிசைன், அதிகப்படியான வசதிகள், அடக்கமான விலை என அசத்தியதால், இந்த நிறுவனத்தின் வெற்றிகரமான தயாரிப்பாக XUV 5OO திகழ்ந்தது. ஆனால், புதிய க்ராஸ்ஓவர்களால் (டஸ்ட்டர், க்ரெட்டா, எஸ்-க்ராஸ்) பின்னடைவு ஏற்பட்டது. அதைச் சரிசெய்யும் விதமாக, மேம்படுத்தப்பட்ட டிசைன் மற்றும் அதிக வசதிகளுடன், கடந்த 2015-ல் XUV 5OO-ன் பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கியது. ஆனால், இனோவா க்ரிஸ்டா, ஹெக்ஸா, காம்பஸ் எனப் புதிய போட்டியாளர்கள் வரிசைகட்டியதால், மஹிந்திராவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்த காரின் விற்பனை அமையவில்லை. எனவே, பெட்ரோல் எஸ்யூவிகளுக்கு ஏற்பட்டிருக்கும் டிமாண்டை மனதில் வைத்து, XUV 5OO-ன் இரண்டாவது பேஸ்லிஃப்ட் மாடலை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது மஹிந்திரா. புதுச்சேரியில் இது டெஸ்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது, படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் வாசகர் அர்ஜூன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்