பவர் கூடிய ஸ்கார்ப்பியோ - இப்போ ஈஸியா ஓவர்டேக் பண்ணலாம்!

ஃபேஸ்லிஃப்ட் / மஹிந்திரா ஸ்கார்ப்பியோ S11தொகுப்பு: தமிழ்

‘ஸ்கார்ப்பியோ பிடிச்சவங்க கை தூக்குங்க’ என்றால், கன்னாபின்னாவெனக் கைகள் உயரும். முரட்டுத்தனமான தோற்றமும், ஆஃப்ரோடிங் தன்மையும், சாஃப்ட்டான சஸ்பென்ஷனும்தான் ஸ்கார்ப்பியோவுக்கு இத்தனை லைக்ஸை அள்ளிக் குவிக்கின்றன. ஆனால், ஒரே ஒரு குறை - இதன் டாப் எண்டு பர்ஃபாமென்ஸ். இதை ஸ்கார்ப்பியோ ஓட்டுபவர்களிடம் கேட்டால் தெரியும். ‘‘டாப் ஸ்பீடில் போகும்போது ஓவர்டேக்கிங்ல ரொம்பக் கஷ்டமா இருக்கு’’ என்று சொல்வார்கள்.
அந்தக் குறையைத் தீர்ப்பதற்காகத்தான் புதிய ஸ்கார்ப்பியோவை அறிமுகம் செய்திருக்கிறது மஹிந்திரா. புதுசு என்றால் புதுசில்லை; ஃபேஸ்லிஃப்ட்தான். அதே 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜினின் பவரிலும் டார்க்கிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். பழசைவிட 20bhp பவர் மற்றும் 4kgm டார்க் அதிகமாகக் கிடைக்கிறது. அதாவது, 140bhp பவர் மற்றும் 32kgm-லும் களமிறங்கி உள்ளது புதிய ஸ்கார்ப்பியோ. கிட்டத்தட்ட XUV 500-வை ஓட்டும் அனுபவத்தை இதில் பெறலாம் என்கிறது மஹிந்திரா. புதுசை அறிமுகப்படுத்திய கையோடு, வேரியன்ட்களையும் மாற்றி அமைத்திருக்கிறார்கள். S11 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த டாப் வேரியன்ட்டில் மட்டும்தான், 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்