மோட்டார் கிளினிக் | Motor clinic - Motor Vikatan | மோட்டார் விகடன்

மோட்டார் கிளினிக்

கேள்வி/பதில்ராகுல் சிவகுரு

`எட்டு முதல் ஒன்பது லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும் பெட்ரோல் எம்பிவி எது? எனக்கு மாருதி சுஸூகி எர்டிகா மற்றும் KUV 100 NXT ஆகியவை பிடித்திருக்கின்றன. ஆனால், எர்டிகாவின் 3-வது வரிசை இருக்கை மற்றும் KUV 100 NXT காரின் மைலேஜ் ஆகியவற்றை, பலர் மைனஸாகச் சொல்கின்றனர். வேறு ஏதேனும் ஆப்ஷன் இருக்கிறதா?’’

- வி. செந்தில் ஆறுமுகம், இமெயில்.

``உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய 7 சீட்டர் பெட்ரோல் கார்கள் - மாருதி சுஸூகி எர்டிகா மற்றும் டட்ஸன் கோ ப்ளஸ். 6 சீட்டர் என்றால், மஹிந்திராவின் KUV 1OO NXT மட்டுமே. டட்ஸன் கோ ப்ளஸ், கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க காராகத் தெரிந்தாலும், சிறப்பம்சங்கள் - பாதுகாப்பு வசதிகள் மற்றும் டீலர் நெட்வொர்க்கில் பின்தங்கிவிடுகிறது. இங்கு இருக்கும் கார்களிலேயே பெரிய இன்ஜினுடன் இருக்கும் எர்டிகா நல்ல சாய்ஸாக இருந்தாலும், நீங்கள் குறிப்பிட்டவாறே கடைசி வரிசை இருக்கைகள் சிறுவர்களுக்கு மட்டுமே வசதியாக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்திருக்கும் KUV 1OO NXT, 6 சீட்டராகத் தனது பொசிஷனிங்குக்கு ஏற்றவாறே இருக்கிறது. ஆனால், முன்வரிசையில் இருக்கும் நடு இருக்கை, சிறுவர்களுக்கே வசதியாக இருக்கும். ஆனால், மைலேஜை அதிகரிக்கக்கூடிய ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டத்தை, காரில் சேர்த்துள்ளது மஹிந்திரா. எனவே, டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து முடிவெடுங்கள்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick