ஆக்சஸரீஸ்

ஆக்சஸரீஸ் கார் / பைக்தமிழ்

வீல் ஃப்ளாஷ் லைட்

பொ
துவாக மழையில் பயணம் செல்லும்போது, அதிலும் இரவில் நல்ல விஸிபிலிட்டி கிடைக்காது. எதிரே ஹைபீமில் ஹெட்லைட் வெளிச்சம் தெரிந்தால், கண்கள் கூசுவது மட்டும்தான் நடக்கும். வருவது பைக்கா, லாரியா என்று தெரியாத அளவுக்குப் பனி படர்ந்திருக்கும் நேரங்களில், இந்த ஃப்ளாஷ் லைட் சூப்பர் சாய்ஸ். இது கொஞ்சம் ஸ்டைலான ஆக்சஸரீ. அதே நேரம், மலிவானது. குட்டி சீரியல் பல்புபோல் இருக்கும் இதை, காற்றடிக்கும் ‘மவுத்’தில் மாட்டிவிட வேண்டும். பைக் ஓடும்போது, இந்த மவுத்தில் இருக்கும் பல்பு எரிந்து மொத்த வீலுக்கும் கவர் ஆவதால், கல்யாணப் பந்தலுக்கு சீரியல் லைட் போட்டதுபோல் ஜொலிக்கும். நீங்கள் விரும்பும் வண்ணங்களில் இதைத் தேர்ந்தெடுக்கலாம். இது சைக்கிள் முதல் பஸ் வரை எல்லா வாகனங்களுக்கும் உண்டு. குட்டி ‘AAA’ பேட்டரியில் இயங்கும் இந்த ஃப்ளாஷ் லைட், நீங்கள் பைக்கை ஆஃப் செய்தால், ஆஃப் ஆகிவிடும். ஒரே ஒரு வேலை - காற்றடிக்கும்போது இந்த பல்பைக் கழற்றி மாட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்க. மற்றபடி கலர்ஃபுல்லாக வாகனம் ஓட்டலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick