டயர்கள் கார்களின் ஷூ

டயர் / டெக்னாலஜிராகுல் சிவகுரு

னிதனுக்குக் கால்கள் எப்படியோ, வாகனங்களுக்கு டயர்கள் அப்படி! ஆம், ஒரு மனிதனின் எடையை எப்படிக் கால்கள் இரண்டும் தாங்குகின்றனவோ, அதுபோலவே வாகனத்தின் எடை - அதில் பயணிப்பவர்கள் மற்றும் அவர்களது உடைமைகள் ஆகியவற்றைச் சேர்த்துச் சுமப்பவை டயர்கள். அவற்றின் பக்கவாட்டுப் பகுதியில் (SideWall) பார்த்தால், அதில் டயரின் பிராண்டைத் தவிர்த்து 155/65 R13 73H, 165/80 R14 85T, 185/65 R15 88S என பிரின்ட் செய்யப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். ஒருவரது கால்களின் அளவைப் பொறுத்து, அவரது காலணியின் அளவு மாறுபடும். அதைப்போலவே, கார்களின் இன்ஜின் திறன் மற்றும் அளவைப் பொறுத்து, அதில் பொருத்தப்படும் டயர்களின் அளவும் மாறுபடும். முன்னே சொன்ன எண்கள், நமக்குச் சொல்ல வருபவை என்ன? உதாரணத்துக்கு, பிரீமியம் ஹேட்ச்பேக்குகளில் பயன்படுத்தப்படும் 195/55 R16 87V என்று குறிப்பிடப்பட்டுள்ள டயரை எடுத்துக்கொள்வோம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick