யமஹாவின் ஜல்லிக்கட்டுக் காளை!

ஃபர்ஸ்ட் லுக் - யமஹா FZ25தமிழ், இரா.கலைச்செல்வன்

டெல்லியில் உள்ள புல்மேன் நட்சத்திர ஹோட்டல், செம பரபரப்பாக இருந்தது. செல்போன், DSLR கேமராக்கள் சகிதமாகத் திரிந்த அனைவரின் முகத்திலும் அந்த ஆர்வம் அப்பட்டமாக தெரிந்தது. ‘இந்திய அளவில் இது ஆட்டோமொபைல் மார்க்கெட்டுக்கு ஒரு முக்கியமான நிகழ்வாக அமையும் என்று நம்புகிறேன்' என்று  யமஹாவின் தலைமை அதிகாரி மஸாக்கி அசானோ, திடீரென மேடையில் தோன்றி நெகிழ்ச்சி காட்டினார்.

2008-க்குப் பிறகு ‘ஒரு 150 சிசி பைக் வாங்கணும்’ என்ற ஐடியாவில் இருந்தவர்களின் முதல் சாய்ஸாக நிச்சயம் வந்துபோனது யமஹா FZ பைக்காகத்தான் இருக்கும். FZ-16 என்ற பெயரில் 150 சிசி-யில் வெளிவந்த இந்த பைக், பல்ஸருக்கும் அப்பாச்சிக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தியது. உண்மையைச் சொன்னால், அதுவரையில் இறங்கு முகத்தில் இருந்த யமஹா, FZ-16 பைக்கின் மூலம் பரமபத ஏணியில் ஏறி கெத்து காட்டியது. மற்ற நிறுவனங்களை ஒப்பிடும்போது, பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்களின் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், யமஹாவின் இன்ஜின் ரீஃபைன்மென்ட்டுக்காகவும் ஸ்டைலுக்காகவும், FZ பைக்   இளைஞர்களைப் பாடாய்ப்படுத்தியது.

உற்சாகமான யமஹா, FZ சீரிஸில் வெர்ஷன் 2.0 மாடலை அறிமுகப்படுத்தியது. முன்னது கார்புரேட்டர் இன்ஜின் என்றால், பின்னது ஃப்யூல் இன்ஜெக் ஷன். Fi-ல் பெர்ஃபா
மென்ஸும் மைலேஜும் கூடுதல் நம்பிக்கையளிக்க, வெர்ஷன் 2.0 மாடலைத் தேடி ஓடினார்கள் இளைஞர்கள். இப்போது அடுத்த அஸ்திரத்தைப் பாய்ச்சிவிட்டது யமஹா. ஆம்! FZ சீரிஸில் அடுத்த வெர்ஷனாக வந்திருக்கிறது FZ25.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick