ஜென் Z பாபர்! | Zen Z New Model Bike - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஜென் Z பாபர்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ட்ரையம்ப் போனவில் பாபர்தொகுப்பு: ராகுல் சிவகுரு

ரெட்ரோ மாடர்ன் பைக் - ஹிப்ஸ்டர்தான் இப்போதைய ட்ரெண்ட். வெளுத்துப்போன சட்டை - டைட்டான ஜீன்ஸ் போட்டுக்கொண்டு, தாடியுடன் கூடிய ஜென்-Z இளைஞர்களைக் குறிவைத்துதான், ரெட்ரோ மாடர்ன் பைக்குகள் அறிமுகமாகின்றன. அதில்,  லேட்டஸ்ட் வரவு ட்ரையம்ப் பாபர். பலரது லைக்குகளைப் பெற்ற ட்ரையம்ப் T120 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக், எப்படி இருக்கிறது?
டிஸைன்

இன்ஜினைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், T120 பைக்குக்கும், பாபர் பைக்குக்கும் துளிகூட ஒற்றுமை இல்லை. பாபர் பைக்கின் சேஸி, முன்பக்க 19 இன்ச் ஸ்போக் வீல் - பின்பக்க 16 இன்ச் ஸ்போக் வீல், மாற்றியமைக்கப்பட்ட ஸ்டீயரிங் ஜியோமெட்ரி ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். சிங்கிள் சீட் ஸ்டைலாக இருப்பதுடன், அதற்குக் கீழே மோனோஷாக் சஸ்பென்ஷன் அழகாகப் பொருத்தப்பட்டுள்ளது. ரைடர் இருக்கையை மட்டும் தேவைக்கேற்ப முன்னும்-பின்னும், மேழும்-கீழும் அட்ஜஸ்ட் செய்யலாம் என்பது ப்ளஸ். மேலும், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரின் பொசிஷனையும் அட்ஜஸ்ட் செய்ய முடிகிறது. பின்பக்க வீல் ஹப் பார்ப்பதற்கு டிரம் பிரேக் போலத் தெரிந்தாலும், உண்மையில் அது டிஸ்க் பிரேக்! கிளாஸிக் பைக்குகளின் வலதுபக்கத்தில்தான் இக்னீஷன் சாவி துவாரம் இருக்கும். அது, பாபர் பைக்கிலும் தொடர்கிறது. பழைமையும் புதுமையும் சமவிகிதத்தில் கலந்த ரெட்ரோ மாடர்ன் டிஸைனில், சிக்ஸர் அடித்திருக்கிறது ட்ரையம்ப்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick