சுத்தமான வத்தல்மலை!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - மாருதி பெலினோ பெட்ரோல்தமிழ் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

‘‘நாளைக்குக் காலையில ஜல்லிக்கட்டுப் போராட்டம் இருக்கு... சட்டு புட்டுனு ஒரு கிரேட் எஸ்கேப் பண்ணிடலாமே!’’ என்று அழைப்பு விடுத்திருந்தார் ஓசூரைச் சேர்ந்த சபாபதி. லயன்ஸ் கிளப் உறுப்பினரும், ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி நடத்துபவரும், மெக்கானிக்கல் இன்ஜினீயருமான சபாபதி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர் மட்டுமல்ல; இந்தியப் பொருட்களை மட்டும்தான் வாங்குவது என்ற கொள்கையும் கொண்டவர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். கார் விஷயத்தில்கூட, இந்திய நிறுவனங்கள் மட்டும்தான் தனது ஃபேவரைட் என்றும் சொன்னார். ‘‘டாடா விஸ்டா வெச்சிருந்தேன். மோ.வி. படிச்சுட்டுத்தான் பெலினோவுக்கு மாறினேன்! அடுத்து பிரெஸ்ஸாவுக்கு மாறினாலும் மாறுவேன்!’’ என்று சொன்ன சபாபதிதான், ஒருநாள் டூராக தர்மபுரிக்குப் பக்கத்தில் இருக்கும் ‘வத்தல்மலை’ என்னும் பகுதியைத் தேர்ந்தெடுத்திருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick