சொன்னதை செய்யும் GT...

ஃபர்ஸ்ட் டிரைவ் - பிஎம்டபிள்யூ 330i GTதொகுப்பு: தமிழ்

பென்ஸுக்கு AMG மாடல் எப்படியோ... பிஎம்டபிள்யூ-வுக்கு GT அப்படி. Grand Tourismo என்பதுதான் இதன் விரிவாக்கம். தெறி பெர்ஃபாமென்ஸில் பட்டையைக் கிளப்பும் வகையைச் சேர்ந்த ‘தனி ஒருவன்’ கார்கள் இந்த GT ரக பிஎம்டபிள்யூ. 5 சீரிஸில் உள்ள 3 மீட்டர் வீல்பேஸ், X சீரிஸ்களுக்கு இணையான லக்கேஜ் இடவசதி, 7 சீரிஸில் உள்ள iDrive சிஸ்டம் என்று கலந்துகட்டிக் கலக்கவருகிறது பிஎம்டபிள்யூ-வின் 3 சீரிஸ் GT. சுருக்கமாக 330i GT. அக்டோபர் மாதம் புனேவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த 330i GT மாடலுக்கு, அப்போதிருந்தே பலத்த எதிர்பார்ப்பு. 330i GT காரில் ஒரு சின்ன ‘ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்’ டிரைவ்.

பிஎம்டபிள்யூ என்றாலே ஸ்டைலிங், டிரைவிங், ஹேண்ட்லிங் எல்லாமே மாஸ் ஆக இருக்க வேண்டும். எல்லாவற்றிலுமே டிஸ்டிங்ஷன் அடிக்கிறது 330i GT. பெட்ரோல், டீசல் இரண்டிலுமே வெளிவந்திருக்கிறது இந்த GT. 2.0 லிட்டர் டீசல் இன்ஜின், 190bhp-யை வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் இன்ஜின், 252bhp-யையும், 35kgm டார்க்கையும் கொட்டுகிறது. இரண்டுமே 2.0 லிட்டர் - 4 சிலிண்டர்தான்; டர்போ சார்ஜ்டுதான்; 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்தான். அடுத்து வரும் 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்டில்கூட இதே டெக்னிக்கல் விவரங்கள் இருக்கலாம் என்கிறார்கள். நாம் இங்கே ஓட்டியது பெட்ரோல் மாடல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick