மொழுக் சிவிக்... இப்போ செம ஷார்ப்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - ஹோண்டா சிவிக்தொகுப்பு: தமிழ்

சிவிக்... 'எங்கேயோ கேள்விப்பட்ட பேர் மாதிரி இருக்கே' என்கிறீர்களா? ஆம், ஒரு காலத்தில் தனவான்களின் செல்ல காராக இருந்தது ஹோண்டா சிவிக். ஹோண்டாவின் பிராண்ட் வேல்யூ, நம்பகத்தன்மை, ஃபன் டு டிரைவ் - இவற்றுக்கு மயங்கிக் கிடந்த சிவிக் வெறியர்கள் நிறைய. நெடுஞ்சாலைகளில் இதன் நிலைத்தன்மை, ‘பாடி ரோலா.. அப்படினா என்ன’ என்று கேட்கும் அளவுக்கு இருந்தது. இதற்குக் காரணம், இதன் சிறப்பான ஏரோ-டைனமிக் டிஸைனும், குறைந்த கிரவுண்ட் கிளியரன்ஸும்தான். ஆனால், இதுவே ஹோண்டாவுக்குப் பாதகமாகவும் அமைந்தது. நடுவுல கொஞ்சம் காணாமல் போயிருந்த சிவிக், இப்போது மறுபடியும் இந்த ஆண்டுக்குள் இந்தியாவுக்கு வரவிருக்கிறது. அதற்கான முன்னோட்டமாக, இந்தோனே ஷியாவின் சிவிக்கில் ஒரு க்விக் டிரைவ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick