யூத்ஃபுல் மாருதி... ஈர்க்கும் இக்னிஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மாருதி இக்னிஸ்வேல்ஸ் - படங்கள்: தி.குமரகுருபரன்

சில வார்த்தைகளைச் சொன்னால் போரடிக்கும். மாருதி என்ற வார்த்தையும் அப்படி ஆகிவிடக் கூடாது என்று மாருதி தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டது. அதன் துவக்கம்தான் இக்னிஸ்.

மாருதியின் ஐந்தாம் தலைமுறை பிளாட்ஃபார்மான AA Plus-ல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இது. பெலினோ வடிவமைக்கப்படும் B பிளாட்ஃபார்மைவிட இது புதியது என்றாலும், அதில் இருக்கும் பல பொறியியல் அணுகுமுறைகளையும் பொதுவிதிகளையும் இதில் கடைப்பிடித்திருக்கிறது மாருதி. அதனால், எடை குறைவானது என்று வியக்கப்படும் பெலினோவைவிடவும் இக்னிஸ் எடை குறைவாக இருக்கிறது. அதாவது, இதன் விலை குறைந்த பேஸ் மாடல் வெறும் 825 கிலோதான் இருக்கிறது. விரைவிலேயே அறிமுகமாக இருக்கிற ‘க்ராஷ் டெஸ்ட்’டின் நியமங்கள்படியும் இக்னிஸ் இருப்பதால், பாதுகாப்பு விஷயத்திலும் சுலபமாக பாஸாகிறது இக்னிஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick