அக்கார்டு VS கேம்ரி எது பெஸ்ட் ஹைபிரிட்?

ஹைபிரிட் ஒப்பீடு - அக்கார்டு Vs கேம்ரிதொகுப்பு: ராகுல் சிவகுரு

சுற்றுச்சூழலுக்கு உகந்த, நல்ல மைலேஜ் தரக்கூடிய ஹைபிரிட் கார்களான டொயோட்டா கேம்ரி மற்றும் ஹோண்டா அக்கார்டு இப்போது கவனம் ஈர்த்திருக்கின்றன. இந்தியாவில் அக்கார்டு பிராண்டின் மறுபிரவேசமாகவும், ஹோண்டாவின் தொழில்நுட்பத் திறனையும் காட்டக்கூடிய விதத்தில் அக்கார்டு ஹைபிரிட் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் தயாரிக்கப்படும் இந்த கார், CBU முறையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே, இறக்குமதி வரி மற்றும் இதர வரிகள் சேரும்போது, 40.59 லட்ச ரூபாய் (சென்னை எக்ஸ் ஷோரூம் விலை) என்று எகிறிவிடுகிறது. டொயோட்டா நிறுவனமோ, கர்நாடகாவில் உள்ள தனது தொழிற்சாலையில் கேம்ரி ஹைபிரிட் காரை அசெம்பிள் செய்கிறது. எனவே, FAME இந்தியா திட்டத்தின்படி, இந்தியாவில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் விலையில் தள்ளுபடி கிடைக்கும். எதிர்பார்த்தபடியே, கேம்ரி ஹைபிரிட் காரின் 41.22 லட்ச ரூபாய் (சென்னை ஆன் ரோடு விலை), அக்கார்டு ஹைபிரிட் காரைவிடக் குறைவாகவே இருக்கிறது. ஆனால், விலை மட்டும் ஒரு காரை வெற்றியாளராக மாற்றிவிட முடியாது. இரண்டு கார்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதே சரியான முடிவாக இருக்கும்.

ஹைபிரிட் தொழில்நுட்பம்

மேலே குறிப்பிட்ட கார்களின் ஸ்பெஷல், ஹைபிரிட் தொழில்நுட்பம்தான். Atkinson Cycle-ல் இயங்கும் பெட்ரோல் இன்ஜின் - எலெக்ட்ரிக் மோட்டார் கூட்டணி என இரண்டு கார்களுக்கும் பொதுவான விஷயங்கள் இருந்தாலும், ஹைபிரிட் சிஸ்டம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. 160bhp பவரை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - 143bhp பவரை வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் கூட்டணியைக் கொண்டிருக்கிறது டொயோட்டா கேம்ரி ஹைபிரிட். குறைவான வேகங்களில் செல்லும்போது ஃபுல் எலெக்ட்ரிக் மோடில் இயங்கும் இந்த கார், வேகமெடுக்க ஆரம்பித்தால் 205bhp சக்தியை வெளிப்படுத்தும் இன்ஜின் - மோட்டார் காம்பினேஷனில் இயங்க ஆரம்பிக்கிறது. இந்த மொத்த பவரையும், முன்பக்க சக்கரங்களுக்குக் கடத்தும் பணியை CVT கியர்பாக்ஸ் செய்கிறது. காரின் வேகத்தைக் குறைக்கும்போதும், நிலையான வேகத்தில் க்ரூஸ் செய்யும்போதும், Regeneration முறையில் கேம்ரியில் இருக்கக்கூடிய 6.5Ah பேட்டரி தன்னை சார்ஜ் ஏற்றிக்கொள்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick