ஏன், எதற்கு, எப்படி? புகை, வாகனத்துக்குப் பகை!

பராமரிப்பு - ஏன், எதற்கு, எப்படி?தமிழ்

சிலர் பைக் அல்லது காரில் செல்லும்போது, தங்களது ரியர்வியூ மிரரில் கறுப்புப் புகை தெரிவதைப் பார்த்து, ‘யாரோட வண்டினு தெரியலை.... ரோட்டையே கறுப்பாக்குது’ என்று முன்னேறிச் செல்வார்கள், ஆனால், அது தங்கள் வாகனத்தின் புகைதான் என்பது அவர்களுக்கு லேட்டாகத்தான் உறைக்கும். ‘புகைப்பது கேடு... நமது உடம்புக்கு மட்டுமல்ல; வாகனங்களுக்கும்தான்!’ இந்தப் புகைக்குப் பின்னால் ஒரு சின்ன எஸ்டிடி.. அதாங்க வரலாறு இருக்கிறது.

ஏன்?

பைக்கோ, காரோ - புகை இரண்டு வகைப்படும். வெள்ளை அல்லது கறுப்பு. சில அரதப்பழசான டீசல் கார்களில் வெள்ளையோடு சேர்த்து நீல வண்ணமும் கலந்து கட்டி வரும். சில புது கார்களில் இருந்து எப்போதாவது புகை வருவது ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அதிக லோடு ஏற்றிச் செல்வதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். மற்றபடி எந்த கலரில் புகை வந்தாலும், இன்ஜினில் ஏதோ கோளாறு என்பதுதான் இதன் பொருள். பல நேரங்களில் இது இன்ஜினையே பாதித்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick